கிழக்கிலும்
மேற்க்கிலும்
உதிக்கும் மறையும்
தினசரி உதயம்
தினசரி மறைவு
இது அதன்
இயல்பு
இருப்பை
கணிக்க இருக்கும்
எப்போதும்
இலைகள்
நடுவில் துளிர்ப்பதுண்டு
அவ்வப்போது
அதன் ஆயுள்
எதுவரை
அதுஅறியாது.
வீசும் காற்றிலும்
எரியும் நெருப்பிலும்
இருந்தது எங்கென
தெரியாது போகும்
ஆயினும்
மறுநாள் உதிக்கும்
கதிர்.
அதன் வெளிச்சம் பட்டு
மறுபடி துளிர்க்கும்
இலை
இலையும் கதிரும்
இருப்பது வேறிடம்
ஒன்றில் ஒன்று
கலக்க மறுப்பின்
காலம் கற்றுக்கொடுக்கும்
பாடம்....
கதிருக்கல்ல
இலைக்கு
மதியம் சனி, ஜூன் 17, 2006
மதியம் புதன், ஜூன் 14, 2006
மறுவீடு
மணலில்
தன் சிறகை குளிப்பாட்டும்
சிட்டுக்குருவி
தலையும் உடலையும் விட
மிகநீள வால்கொண்ட
பல வண்ணப் பறவை
அதிகாலை நேரம்துயில் எழுப்பும்
மயிலின் அகவு
மடிகணக்க பால் தரும்
பசு
இரவுகளின் இடையே
இம்சிக்கும் தவளைகள்
புல்லின் நுனியில் சிறகசைக்கும்
சிறுதட்டான்
தன் சுற்றம் தவிற
எதையும்விரும்பாத
நாய்க்குட்டி
மழையில்
நனைந்தவாரே குளிக்கும்
சின்ன மீன்கொத்தி
என எல்லாம் இருக்கிறது
என் சுயத்தை தவிர.
Posted by Unknown at மதியம் புதன், ஜூன் 14, 2006 1 comments
மதியம் புதன், ஜூன் 07, 2006
தமிழ் மகளுக்கு கமல்
தமிழ் மகளுக்கு
தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்
காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்
ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்
சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண்
புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்
Posted by Unknown at மதியம் புதன், ஜூன் 07, 2006 2 comments
Labels: கமல்ஹாசன்
மதியம் சனி, ஜூன் 03, 2006
மதியம் வியாழன், ஜூன் 01, 2006
தியும் தீயும்
அடி ஆத்தி
அங்கே பார் பெரும் தீ
உள்ளே யார் அது உன் சக்களத்தி?
இல்லை அவள் என் ஓரகத்தி
அதற்க்கேன் கூச்சல் கத்தி
அதுதானே இப்போது மதி
இல்லாவிட்டால் மாறிவிடும் என் விதி
சொல்வார்கள் இது என் சதி
அப்புறம் என் கதி?
யாரும் வருவதற்குள் அணையாதே தீ?
அவள் பிழைத்துக்கொண்டால் என்கதி
அதோகதி.....!
Posted by Unknown at மதியம் வியாழன், ஜூன் 01, 2006 3 comments
Labels: மகேந்திரன்.பெ