லாதாவின் கவிதைகள்

எதிர்பாராதபொழுது

பட்டாம் பூச்சியாய்ப் பறக்கும்
உன் துடிப்பில்எத்தனை யுகங்கள்
உயிர்த்திருந்தேன்
சிலிர்க்கும் புயலாய்உன் வேகம்

என் கணங்களைஅர்த்தப்படுத்தின
அன்று இரவு கண்ணாமூச்சி

விளையாடிக் கொண்டிருந்தபோதா
உன் கால்கள் வளர்ந்தன?
நீ பொறுக்கி வந்த உடைந்த பொருட்களும்

தெருச் சண்டைகளும்
இன்னமும்ஒட்டப்படாமல் கிடக்கின்றன
உனக்கும் நிலவுக்கும் உருட்டி வைத்துள்ள

சோற்று உருண்டைகளை
என்ன செய்யட்டும்?

அணுசக்தி

கடைந்த பாலில்மிதக்கும் வெண்ணெய்
சுழற்றச் சுழற்றத்திரண்டெழும்
தொட்டும்தொடாமலும்ஒரு சிறு நரம்போடும்

நுண்ணிய வாசம் கிளர்ந்தெழஉயிர் ஊறும்
ஒன்றாய் பத்தாய் ஆயிரம் ஆயிரமாய்

அணுக்கள் பெருகப் பெருக
எங்கும் பால் மணக்கும்
வலி ருசிக்கும் அற்புதத்தை

அறிவாயோ என் பூவே?
தெருவெங்கும் ஓடிதிசையெங்கும் கூவி

இறக்கை விரிக்கும் உலகம்
எல்லாம்எல்லோரும்வண்ணத்துப் பூச்சிகள்
எத்தனை கோடி இன்பம்!
அணுவைத் துளைக்கத்தாங்குமா

என் சிறு பூ?
ஒரு நொடியில்மூச்சடைத்து

வீழ்ந்து மரிக்கும்கரப்பான் பூச்சி

திணைப்புலன்

தீக்கிளறும் உராய்வுகளைக்கவனத்தோடு

தவிர்த்தபடிதெருச் சுவரில் அமர்ந்தோம்
வழமைபோல் அன்றும்வழிபாடு

எங்கள் முகங்களைக் கீறியிருந்தது
பாவத்தின் பிறப்பாகிய நீக்களே

பூமியின் பாரம் தாங்க வேண்டும்
வேதங்கள் வேறு என்றாலும்சாரம் ஒன்றுதான்.
தெருவை மறைத்த புகை மூட்டத்தில்

மறுபுறம் இருந்தவள் உரத்துப் பாடினாள்
தளதளத்திருந்தது வயல்சப்பாத்துக் காலுடன்

அவர்கள்வயல் அழிந்தது நிலமும் அழிந்தது
முகம் சிவந்து தெரு பதுங்கநாங்கள் கிளம்பினோம்
பனிக்காலத் தோற்றமெனநகரை நிறைத்த

நுரைப் பஞ்சுகளும்சாலை மரங்களின்
வண்ண மின் பூக்களும்காற்றைச் சூடேற்றின
நகரம் உறங்கிய பின்உலாக் கிளம்புவது

தேவதைகளா? சைத்தான்களா?
என்றபடி எதிரில் இவன்
அன்றைக்குத் தீ மூட்டசிக்கிமுக்கிக்

கல் தேடும் இவனிடம்இனியும் தோற்பதற்கில்லை
இரவுக்குள் ஒளிந்திருந்த
அவள் கண்களைத் தேடி எடுத்தேன்
'எந்தப் போருமே
முடிவற்ற போர்களையே தொடங்கி வைக்கிறது'

அவள் பனி மூட்டினாள்காலம் கலைக்காத தடங்களை
அதில் எரித்தாள்யுகங்களாய்நடந்த களைப்பில்
நொந்த பாதங்களைத் தன்கூந்தலால் நீவினாள்
ஊரடங்கு உடைத்துப் புறப்பட்டோம்

நிழலில் கட்டுண்டிருந்த வீடுகளை
அவிழ்த்துவிட்டபடியே நடந்தோம்
இரவுகள் பல கடந்துவந்தது அவள் வீடு.
சுவர்கள் அற்ற அதனுள்ளேஅறைகளும் இல்லை
காற்று இழைக்கும் அரங்கில்ஆடலாம் வா
காற்சிலம்பு களைந்து நாங்கள்வான்வெளி

இறங்கவிடிந்தது பொழுது.

லதா சிங்கப்பூரில் வாழும் தமிழ்க் கவிஞர். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு
'பாம்புக் காட்டில் ஒரு தாழை' யிலிருந்து

ஆலியோடு தூங்கும் தனிமை


ஆலியோடு தூங்கும் தனிமை
சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்தண்ணீர்த்
திவலை மிதித்துபடியேறும் தனிமை
மெழுகுத் திரி வெளிச்சத்தினடியில்

கருமையாய்த் தேங்கி நிற்கிறது
பின் என்னோடு நடந்தபடி என்ன

பேசுவதெனத் தெரியாமல் தயங்குகிறது
தேனீர் தயாரிக்கையில்

' எனக்கு ' எனக் கேட்கக் கூடாதா
அது என்றும் தேனீர் அருந்துவதேயில்லை
பூக்கள் மிதக்கும் தாழியில்

தாமரை மகரந்தத் தலத்தில்
தலை சாய்க்கிறது
ஆலிக்குட்டியின் மூச்சருகே போய்

தூங்கிவிட்டதா எனத் தொட்டுப் பார்க்கிறது
தனிமை என் நாய்க்குட்டியை

அணைத்துக்கொண்டு தூங்கப் பிரியப்படுவதை
உணரும் வேளை
கசிந்துருகும் மெழுகுச் சொட்டுகள்

கண்ணுக்குள் விழுந்து உறைந்து
உதிர்கின்றன
அதன் பிறகும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்

தனிமை என் வீட்டுக்குள் இடம்மாறி இடம்மாறிப்
படுத்துறங்குவதை.

வெறுமை
உன் படுக்கையறைக்குள்
தொங்கும் வெற்றுத் தூக்கணாங்குருவிக் கூடோ
கடைசித் துளிக்குப்

பிந்திய மதுக் கோப்பையோ
என்றேனும் சொல்லியிருக்கிறதா

என் வெறுமையை.

-ரோஸ்லீன்

ரோஸ்லீன் கவிதைகளுக்கான நன்றிகள்: தோழி.காம்

தீ விரித்த திசையில்


தீ விரித்த திசையில்
வெளிச்சக் கிளை நகர்ந்து செல்கிறது
கருப்பு இலைகள் அசைந்து போய்

அதில் பதிகையில் பெருகும் நட்சத்திரங்களாய்
பூக்கள் ஊறுகின்றன
எல்லாப் பூவுக்குள்ளும் வெளிச்சம்

கனலுகிறது
உதிரும் தீப்பொறிப் பூக்கள்

மின்மினிகளாய் உருப்பெற்று
சிறகுகளால் வானத்தின்
பாதத்தையும் பூமியின்
உச்சியையும் தொடுகின்றன
இலைகளும் பூக்களும்

அற்றுப் போகுமொரு அவகாசத்தில்
அக்கிளை வேர்களின் நினைவை
அருந்துகிறது
அங்கே கசப்பாக ஓடுமொரு நதியில்

கங்கு போல் விழுந்து
கண்கள் பொங்கும்போது
சாம்பலாய்த் திறக்கிறேன் இமைகளை

-ரோஸ்லீன்

எனக்குள்ளிருக்கும் காடு


அந்தியில் ஆழ் மனதிற்குள்
வடக்கு நோக்கியே அந்த
மலை படுக்கிறது
அதன் பாதத்தின் விரல்களில்

மழைக்கால மரங்கள்
அசைந்துகொண்டேயிருப்பதால்
தூக்கமேயில்லை
கால்களின் நரம்புகளாய்

காட்டுக் கொடிகள் பற்றிக் கிடப்பதை
ஓயாமல் பேசித் திரியும் எனது
நரம்புகளுக்குள் ரத்தம் பச்சை நிறமாகிப்
போனது யாருக்குமே தெரியாது
இதற்கான பிரார்த்தனையைக் கூட

முழங்கால்களுக்கிடையே சிக்கிக்
கிடக்கும் பாறையில் அமர்ந்துதான்
பேசிக்கொள்கிறேன்
பறவைகள் அந்தி உணர்வது போல்

அந்நேரம் இருள் அரும்புகையில்
புல்மேடுகளில் பனித் துளிகள்
நடுங்குகின்றன
லீலிப்பூ இடை நீரோடையில்

எதையோ தேடுகிறேன்
கரையெங்கும் கூழாங்கற்கள்

உதடுகளாய் சிதறிக் கிடக்கின்றன
அந்த உதடுகளை
அள்ளிச் சுவைத்து முத்தமிட்டுக்
குளிக்கிறேன்
தனிமையைத் தந்துவிட்டுப்

போனவனின் உதடு போல
அல்ல
அவை உறைந்த காலக் குளிர்
அவற்றில் முகம் வைத்து

மரங்களடர்ந்த மார்பில் சாய்ந்து
முத்தமிட்டவாறே தூங்க நினைக்கிறேன்
கிழக்கு நோக்கிப் படுக்கிறது

அந்த மலை

-ரோஸ்லீன்

Test Page


TEST PAGE test page

சே குவேராவுக்காக


நீ பிறந்த தேசம் வேறு
உன் மொழி வேறு-
தொழில் வேறு
உனக்கிருந்த ஆவல் வேறு
எங்கோ ஒரு தேசத்தில்
ஏழ்மை தெரியாமல்பிறந்த நீ -
எதிர்முனை ஆள்பவரின்
என்னச் சிறைகளை
தகற்த்தெறிந்தாய் வாய்ச்சொற்க்கள்
பேசாமல் உன்
தோள்பட்டைதோட்டாக்கள்
பேசிய வார்த்தைகள்
ஆயிரம்
தொழு நோயாளிகளுக்காய் -
நீ அலைந்த தென்னமெரிக்க
சாலைகளை விட உன்
கனவு மிகநீண்டிருந்தது-
உனக்கிருந்த ஆஸ்துமா கூட
உன்னை தாக்கிய போது
நோய்பட்டிருக்கும்
சுதந்திரமில்லா தேசங்கள்
தேடி சுதந்திரமாய்சுற்றிய நீ
கம்யூனிசம் என்பதன் ஒரே
அர்த்தம்
காம்ரேடு என்பதற்கு
முழு முகவரி
உன் பொலிவிய நாட்குறிப்பு
கூறுவது போல் ஒரு
முடிவற்ற பயணி நீ
உனக்குள் இருந்த போராளி
விழித்த போது உடன் விழித்த
தேசங்களை எண்ண விரல்கள்
போதாது.
நீ பயணம் செய்த பாதைகளில்
இருப்பவை வரலாற்று மைல் கற்கள்.
பிறந்த தேசம் வேறெனினும்
நீபோராடிய நாடு உனக்கு பதவி
தந்தது எல்லாம் தந்தது நீ
தேடிய ஒன்றை தவிற
உலக விடுதலை
காங்கோ காடுகளுக்கும்
உனைதுளைத்த அந்த
கள்ள தோட்டாவுக்கும்
வாயிருந்தால் சொல்லும்
அது பெற்ற
பெறும் பேற்றை.
-மகேந்திரன்.பெ

தலைப்பு வையுங்கள்


இரவுகளில் விழித்திருக்கும்
உனக்கு எப்போதேனும்
என் ஞாபகம் வருவதுண்டா?
சில காத தூர பயணங்களில்
உன் கண்களிடம் இருந்து
விடுபட முடியாது
கண்ணீருடன் நான் செல்லும்
வழிப்பாதை நோக்கியபடி
அமர்ந்திருக்கும் உனைக் கண்டால்
எனக்கு இப்போதும் சிரிப்புத்தான்
வருகிறது நீயும் நானும்
வேறு வேறு பாதையில் பயனித்த போதும்
ஒருமுறை கூட
பாதை தவறியதில்லை
சில நேரங்கள் நமக்குள்
இருக்கும் அன்பை வெளிப்படுத்த
முடியாது விழிகளுள் மட்டும்
பேசிக்கொள்வோம்
யாருக்கும் தெரியாமல்
அது
விடியும் வரை என்றால் கூட
என் எண்ணங்களோடு
நீ மாறுபட்டாலும் என்னோடு
எப்போதுமில்லை
உன் சின்ன விழியில்
எப்போதும் தெரியும்
சந்தோஷம் என்னை பார்த்ததால்
என்று நான் தப்பாகவே
இப்போதும் நினைக்கிறேன்
உனை மறுமுறை பார்த்தால்
கட்டிக்கொண்டு அழுவேனா
தெரியாது
நிச்சயமாய் பேச்சுவராது
-மகேந்திரன்.பெ