லீனா மணிமேகலையின் புதிய கவிதைகள்
1. வரலாறு


அவள் ஒரு கண்ணாடி


அவளருகே சில கற்கள்

அவள் நேசிக்கும் கற்கள்

அவள் வெறுக்கும் கற்கள்

அவள் முன் பின் அறிந்திராத கற்கள்2. புள்ளிவிவரம்


ஒவ்வொரு மூன்று நிமிடமும்

ஒவ்வொரு ஐந்து நிமிடமும்

ஒவ்வொரு பத்து நிமிடமும்

ஒரு பெண் மானபங்கம்

ஒரு பெண்

சிசுக்கொலை

ஒரு

பெண்

துன்புறுத்தப்படுதல்மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது

கைகளுக்கு ஏன் பத்து விரல்கள்

கடந்தேன்

சாலை மிக நீளம்

ஒரு சூயிங் கம்மை விடகடைக்கார கிழவன் தன் மனைவியை

ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா

பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின்

முலையைப் பற்றியிருப்பானா

நேற்று

சென்ற வாரம்கைபேசியில் பத்து கிலோ எடை குறைப்புக்கு

பெண்களுக்குப் பத்து சதவிகிதம் தள்ளுபடி

அறிவிப்பு குறுஞ்செய்தி. எடை குறைத்தால்

ஒவ்வொரு பத்து நிமிடம் என்பது

ஒவ்வொரு பதினைந்து நிமிடம் என்று மாறுமா?

வன்புணர்ச்சிக்கும் எடைக்கும் தொடர்பு உண்டா?இரண்டு பேருந்துகள் தவற விட்டேன்.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போகும்

இளைஞர்களிடமிருந்து

என் பின்புறத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டும்.

என்னருகில் இன்னும் இரண்டு பெண்கள்.

அவர்களுக்கும் பேருந்து ஆண்களிடமிருந்து

தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கலாம்.

நான்கு, ஆறு, எட்டு

ஒன்பதாம் எண் பேருந்தில் ஏறி விட்டேன்

ஒரு சிறுவன், ஏழு வயதிருக்கும்.

சில வருடங்களில்

அவன் யாரையாவது காதலுக்கு வற்புறுத்தலாம்

இல்லை தன் தங்கையின் பொம்மைகளை

இன்று மாலை உடைக்கலாம்எண்கள் ஏன் வரிசையாக இல்லை

கடிகாரம் ஏன் வட்டமாக இருக்கிறதுமணி அடிக்கும் போதெல்லாம்

ஒரு திராவகம் ஊற்றப் பட்ட கன்னிமையோ

ரத்தப் பெருக்குத் துணியோ

கொதிக்கும் விந்துவோ

தொடை சூட்டுக் காயமோ

கேஸ் சிலிண்டரோ

நினைவுக்கு வந்து தொலைக்கிறதுஎன் அம்மாவிடம் கேட்க வேண்டும்.

எருக்கஞ்செடிக்கு தப்பியதால் தான்

என் உடல் நீலமாக இருக்கிறதா என்று

என் எழுத்துக்களும் நீலமாக இருப்பதாகத் தான்

புகார் இருக்கிறதுதொலைக்காட்சி விளம்பரம்

ஒரு சிவந்தப் பெண்ணின் புட்டம்

ஒருவேளை சிவப்பழகு கிரீம் வாங்குவதற்காக

உயிருடன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறேனாகாபி ஆறிக் கொண்டிருக்கிறது

அதில் மிதக்கும் ஆடை

நாளிதழின்

அடையாளம் தெரியாமல் ஆற்றங்கரையில் ஒதுங்கியிருந்த

பெண் பிணத்தின் கலைந்திருந்த ஆடையை ஒத்திருந்ததுபத்தில் ஒரு பெண் எல்லைகளில் கடத்தப் படுகிறாள்

எதிர்ப்படும் பெண்களில் ஒருவரை

நாளை பார்க்க முடியாமல் போய் விடுவேனா

பக்கத்துக்கு வீட்டுக் குழ்ந்தை காணாமல் போய்விடுமா

என்னை யாரவது எண்ணிட்டிருக்கிறார்களாஎனக்கு உனக்கு அவளுக்கு

ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும்

ஒவ்வொரு மூன்று நிமிடமும்கடந்து செல்லும் ஆண்களின்

சட்டைப் பைகளை சரி பார்க்க வேண்டும்

அதில் நானறிந்த சிறுமியின் வாசனை இருக்கலாம்.

அல்லது ஒரு வன்மையான வார்த்தை

மேலும் ஒரு வயாக்ரா மாத்திரையாரையாவது துன்புறுத்தினாயா

சில மணிநேரங்களுக்குள்

சில மாதங்களுக்குள் யாரையாவது காயப்படுத்தினாயா

சில வருடங்களுக்குள்

யாரையாது வன்நுகர்ந்தாயாகேள்விகள்

தாய்களில், தங்கைகளில், காதலிகளில்

இருக்கும் பெண்களை விடுவிக்கலாம்

சொந்த ஆண்களில் இருக்கும் ஆணைக் கொல்லலாம்

உடனடி காரணமாக அன்பை சொல்லலாம்


அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிப் பார்க்கலாம்
3. பசி


இறுதியில்

காவல் அதிகாரி

என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்


விசாரணையின் போது அவர்

கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்

ஆடையில்லாத என் கவிதையைக் காண

அவருக்கு அச்சமாக இருந்ததாம்.


குற்றங்கள் விளைவிப்பதே

தன் தலையாயப் பணி என்பதை

என் கவிதை ஒத்துக் கொண்டதால்

அபராதம் அல்லது சிறைத்தண்டனை,

பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி

தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்

என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்

அவரை திடுக்கிடச் செய்தனவாம்


அபராதம் கட்ட பணம் இல்லாததால்

சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை

கம்பிகளை மீட்டிக்கொண்டு

சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது


நாளடைவில் மற்ற கைதிகளும்

ஆடைகளை களைந்தனர்

அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்

அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்


சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்

மெல்ல நகரமெங்கும் பரவியது


நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்

அதன்பிறகு

அரசும் இல்லை

குடும்பமும் இல்லை

கலாசாரமும் இல்லை

நாணயங்களும் இல்லை

விற்பனையும் இல்லை

குற்றமும் இல்லை

தண்டனையும் இல்லை4. வேடிக்கை

நீ உன் சொற்களை

என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்


மலம் மூத்திரம்

கழுவப்படாத கழிப்பறை

அழுகல் அலறல்

செத்த எலி

வீச்சம் நிணம்

ஊசிய மீன்

வலி உதிரம்

கறை இருள்

பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்


என்னிடமும் சொற்கள் இருந்தன


அவர்களிடமும் சொற்கள் இருந்தன

அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை

சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன

கட்டவிழ்ப்பு


நான் லீனா

நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்

ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்

ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்

வாழ்கிறேன்

என் வேலை

என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்

பரப்பியே வைத்திருப்பது


நாடு கோருபவ்ர்கள்

ஜிகாத் தொடுப்பவர்கள்

புரட்சி வேண்டுபவ்ர்கள்

போர் தொடுப்பவர்கள்

ராஜாங்கம் கேட்பவர்கள்

வணிகம் பரப்புபவர்கள்

காவி உடுப்பவர்கள்

கொள்ளையடிப்பவர்கள்

நோய் பிடித்தவர்கள்

எவன் ஒருவனும்

வன்புணர்வதற்கு ஏதுவாய்

யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு

கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள

சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே

அவ்வப்போது

காலக்கெடுவில்

லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை

தூர் வாருவதையும்

படிப்பித்திருக்கிறார்கள்


எனக்கு தெரியும்

அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்

லும்பன் தரகன் மகாராஜா தளபதி

திருடன் கணிப்பொறிக்காரன் போராளி

போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்

கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி

கணவன், தந்தை, சகோதரன், மகன்

எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி

என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது

நிறம் கிடையாது

நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்

வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்

ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்

என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்

யேசு அல்லா இந்திரன் வர்ணன்

சூரியன் கருப்பசாமி அய்யனார்

ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்

யாவும்

கலைக்க முயன்றும்

என் சூலகத்தில்

தங்கிவிட்ட கருக்கள்


அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ

ராக்கெட்டோ கன்னிவெடியோ

எறியப்படும் குண்டுகளுக்கு

உடல் செத்தாலும்

யோனிக்கு சாவில்லை

யோனியிலும் சாவில்லை2.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி

அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி

தோழர் என்றெழுதினாய்

உடலை உதறி கொண்டு எழுந்து

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்

என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்

உபரி என யோனி மயிரை விளித்தாய்

உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்

லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்

பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்

முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்

மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்

பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்

இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்

மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்

குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது

சோவியத் உடைந்தது

எழுச்சி என்றாய்

அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து

உப்பை சுவைக்க சொன்னேன்

கோகோ கோலா என்று முனகினாய்

மயக்கம் வர புணர்ந்தேன்

வார்த்தை வறண்ட

வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்

இது கட்டவிழ்ப்பு என்றேன்-லீனா மணிமேகலை