புண்ணாக்குப் புரட்சி


செங்கொடி ஏந்து

சித்தாந்தம் பேசு

அடுத்தவன் பேசினால்

வாளெடுத்து வீசு

கற்பை காத்திட

காட்டினில் வன்புணர்

தாயகம் காக்க

ஏதாவது பத்திய ஆயுதம்

பற்று.

மிரட்டு

கொடி பிடி

கோசம் போடு துரத்தி வந்தால்

தப்பித் தோடு

ரஷ்யா பற்றி பேசு

அமெரிக்க ஆட்சி பற்றி பேசு

அடுத்த வேளை சோறு பற்றி

மறக்கச் சொல்

மலம் கழி நாறடி.

நீயும் நாறு

உண்மைச் சொன்னால்

உதைக்கப் போ

ஆயுதம் புரட்சி அடுத்த வேளை

கோல்ட் ப்ளேக்

அடுத்தவன் காசில் அட்டூழியம்

செய்,

மக்களை தூண்டு

மண்டையில் அடிபட வை

நீ மட்டும் மறைந்து போ

ஒளிந்துபோ

எதிப்பவனையும்

பார்ப்பான் ஆக்கு

எதையாவது சொன்னால்

ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடு

உதைத்து அனுப்ப முயற்ச்சி செய்

முடியாவிட்டால்

இன்றுபோல் ஓலம் போடு

எப்போதும்.

புரட்சி புண்ணாக்கு

மாட்டுக்கு போடு

முதலில் பசித்தவன்

வயிற்றுக்கு தீனியை

போடு

வசதியை மறு

வசதியானவனை

மற ப்ளாக் எழுது

கட்டம் கட்டு

எதிர்த்துப் பேசினால்

ஏறக்கட்டு.

திட்டம் போட்டு

பிரச்சாரம் செய்

போலீஸ் துரத்தினால்

விபச்சாரம் செய்

எனக்கும் வெறி புடிச்சிறுக்கு


மூன்று டன் பாரம் ஏற்றிய

லாரியின் சக்கரம் என் முதுகில்

ஏறியது போல்

மூச்சு முட்ட நடக்கிறேன்

வழிகள் தோரும் தொடரும்

வண்ணத்துப்

பூச்சிகளின்

இறக்கைகளை எனது

இரு கைகளால் பிய்த்துப்

போட்ட படியே

கனவுகளின் கால

வெள்ளம் என் கரையைக்

கடந்துவிடாமல்

காத்திருத்தலின் அவசரம்

போகும் பாதைதெரியாமல்

பினவறை நோக்கி

நீள்கிறது என் கால்களின்

பார்வை என்ன செய்ய

என்னவாக

என எதுவும் தெரியாமல்

இருள் கவ்விக்

கிடக்கிறது மயானம்

அமைதியை கிழித்தபடியே

ப்ளாகர் கணக்கில்

கணக்கில்லா பின்னூட்டங்களை

அள்ளித் தெளித்தபடியே

வருகின்றன அனானிமஸ்

பின்னூட்டங்கள்

முற்றும் துறந்துவிட காலம்

கடக்கவில்லை

முழுதாய் திறந்துவிட

ப்ளாகர் சுத்தமில்லை

இன்னும் மாடுரேசன்

இல்லையா

என மனதை

மயக்கும் ஆசையில்

கூகிள் டாக்கில்

கொலைவெறியோடு சிபி