எனக்கும் வெறி புடிச்சிறுக்கு


மூன்று டன் பாரம் ஏற்றிய

லாரியின் சக்கரம் என் முதுகில்

ஏறியது போல்

மூச்சு முட்ட நடக்கிறேன்

வழிகள் தோரும் தொடரும்

வண்ணத்துப்

பூச்சிகளின்

இறக்கைகளை எனது

இரு கைகளால் பிய்த்துப்

போட்ட படியே

கனவுகளின் கால

வெள்ளம் என் கரையைக்

கடந்துவிடாமல்

காத்திருத்தலின் அவசரம்

போகும் பாதைதெரியாமல்

பினவறை நோக்கி

நீள்கிறது என் கால்களின்

பார்வை என்ன செய்ய

என்னவாக

என எதுவும் தெரியாமல்

இருள் கவ்விக்

கிடக்கிறது மயானம்

அமைதியை கிழித்தபடியே

ப்ளாகர் கணக்கில்

கணக்கில்லா பின்னூட்டங்களை

அள்ளித் தெளித்தபடியே

வருகின்றன அனானிமஸ்

பின்னூட்டங்கள்

முற்றும் துறந்துவிட காலம்

கடக்கவில்லை

முழுதாய் திறந்துவிட

ப்ளாகர் சுத்தமில்லை

இன்னும் மாடுரேசன்

இல்லையா

என மனதை

மயக்கும் ஆசையில்

கூகிள் டாக்கில்

கொலைவெறியோடு சிபி

17 comments:

said...

உங்கள் எல்லோருக்கும் என்ன ஆச்சு ?

:(

said...

ம்கூம்... உங்களுக்கு ப்ளாக்கரோ போபியா நோய் பிடித்து இருக்கிறது!

said...

//கூகிள் டாக்கில்


கொலைவெறியோடு சிபி
//

ஏனய்யா இப்படி விளம்பரப் படுத்துகிறீர்?

said...

//உங்கள் எல்லோருக்கும் என்ன ஆச்சு ?
//

கவிதைக் கணல்
எங்கள் கண்களில்
பீடித்துக் கொண்டது!

கைக்கு வந்தது,
கற்பனையில் உதித்தது
எல்லாமும்
கவிதைகளாய் அவதரிக்க,
சாலையைக் கடக்கும்போது
சடுதியிலொருவன்
திட்டுகிறான்
குடும்பத்தினூடே
சொல்லிவிட்டு
வந்தாயா என்று!

said...

//உங்கள் எல்லோருக்கும் என்ன ஆச்சு ?//

சிபி ஓடியாங்க ஓடியாங்க இங்க ஒருத்தர் தனியா வந்து மாட்டிகிட்டாரு பெரிய கவுஜர் இவரு

said...

//ம்கூம்... உங்களுக்கு ப்ளாக்கரோ போபியா நோய் பிடித்து இருக்கிறது!//

ஆமா அதனால எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டு வெறியேத்துறம்

said...

//ஏனய்யா இப்படி விளம்பரப் படுத்துகிறீர்? //

மன்னிக்க எனக்கு விளம்பரம் பிடிக்காது
வெறும் ரம்தான் பிடிக்கும்

said...

//கைக்கு வந்தது,
கற்பனையில் உதித்தது
எல்லாமும்
கவிதைகளாய் அவதரிக்க,
சாலையைக் கடக்கும்போது
சடுதியிலொருவன்
திட்டுகிறான்
குடும்பத்தினூடே
சொல்லிவிட்டு
வந்தாயா என்று!
//

அப்படியும் கவுஜ தானா நம்மள திருத்த முடியும்?

said...

//பினவறை நோக்கி
நீள்கிறது என் கால்களின்
பார்வை என்ன செய்ய //

என்னங்க இது????

கொல வெறி இருக்கலாம் அதுக்காக இப்படியா?...

ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பாபாபாபாபா

said...

// நாமக்கல் சிபி said...
//உங்கள் எல்லோருக்கும் என்ன ஆச்சு ?
//

கவிதைக் கணல்
எங்கள் கண்களில்
பீடித்துக் கொண்டது!

கைக்கு வந்தது,
கற்பனையில் உதித்தது
எல்லாமும்
கவிதைகளாய் அவதரிக்க,
சாலையைக் கடக்கும்போது
சடுதியிலொருவன்
திட்டுகிறான்
குடும்பத்தினூடே
சொல்லிவிட்டு
வந்தாயா என்று! //

கமெண்ட் போட வந்த இடத்திலேயும் ஏன் இந்த கொல வெறி....

said...

பாவமையா மகி நீ!

நீயும் என்னதான் பன்னுவ?

அண்ணாச்சி சில கவிஜ எழுதி ஆரம்பிச்சு வச்சார்,

அப்புறமா நம்ம அய்யனார் மய்யமா அடர்ந்த கானகத்தில் உன்னை உக்கார வச்சார்,
நானும் என் பங்கிற்க்கு ஒரு மூண்றாவது கொம்பு சீவினேன்.

நம்ம வெளியே மிதக்கும் அய்யா அப்போ அப்போ கெட்ட வார்த்தை கெடாத வார்த்தையெல்லம் மொத்தமா அள்ளிப் போட்டு எழுதினார்,

பத்தாதற்க்கு இப்போ புதுசா சிபி கலாய்த்து கவி(??!)புனைய ஆரம்பிக்க

அதை இப்போ விவ் வெதைக்க ஆரம்பிச்சுட்டார்,

அதனால உனக்கு இப்படி ஆனது ஒன்னும் பெரியவிசயமில்லை,

பாவம் புள்ளப் பூச்சி நீ, தொடர்ச்சியா காமெடிப்(??!) பதிவாப் போட்ட!

இப்போ உன்னயவும் வெறியேத்தி விட்டுடாய்ங்க வேற என்ன சொல்லுறது!

அன்புடன்...
சரவணன்.

said...

//பாவம் புள்ளப் பூச்சி நீ, தொடர்ச்சியா காமெடிப்(??!) பதிவாப் போட்ட!

இப்போ உன்னயவும் வெறியேத்தி விட்டுடாய்ங்க வேற என்ன சொல்லுறது!
//

என்னைய வச்சி காமெடிகீமெடி எதுவும்பன்னலியே?

said...

மகி

என்ன நடக்குது இங்க? :-?

நேற்றைக்கு நல்லா தானே இருந்தீங்க?

said...

:((

//என்னைய வச்சி காமெடிகீமெடி எதுவும்பன்னலியே? //

நீங்க தான்யா எங்கள வச்சு காமெடி பண்றீங்க :)))

said...

//நேற்றைக்கு நல்லா தானே இருந்தீங்க?
//

மாயன் அண்ணே! அது நேற்றைக்கு, நாங்க வெறியேத்திவிட்டது இன்னைக்கி!

said...

எப்படிங்க இப்படி

said...

எழுத்துப் பிழை