கனிமொழி கவிதைகள்மூடிய விழிகளைத் தாண்டி
துளைக்கின்றது குத்திட்ட பார்வை
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது
புன்னகை.சொல்லொணாப்
பதற்றங்கள்நிறைக்கின்றன என்னை.
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்
குருதியில் தோய்த்த
கத்திகளைகருத்த உதிரத்தின் நெடியோடு.
குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும்நிறைந்த அறைக்கு
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பதுஉன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடுநடந்த
சாலைகளை.
ஓய்ந்து விரிந்த இரவுகளில்கனவாய்
வேண்டுதலாய் யாசித்துசிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம்சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்துபேழைகள்
திறக்கின்றனபேய்களும்
தேவதைகளும்ஒருங்கே
அலையும்காடுகளில் முகையும்பூக்களின்
மணம்திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித்துவளும்
கரங்கள்.
-கனிமொழி

விழி நிறையவிடியும் என்ற
கனவுகளோடு காத்திருக்கிறோம்.
வழி நெடுகிலும் நட்சத்திரங்களின்
அணிவகுப்பு.
தங்கத் தாரகைகள், புதிய சூரியன்கள்
புயல்கள், காட்டாறுகள்,சிகரங்கள்,
மாவீரர்கள்,அறிவுஜீவிகள், அறிஞர்கள்.
வாய் பிளந்து நிற்கிறோம்.
பொங்கிப் பிரவாகமாகும் நெகிழ்ச்சியோடு
சிலிர்த்து,உச்சம் தொடும் உணர்வோடு,
வெடித்து வானம் கிழிக்கும்வாத்தியங்களோடுகாய்ந்து
சிறுத்த நாபிகள்கிழித்துச்
சிதறும் வாழ்த்தொலிகள்
.குளிர்ப் பொய்கையைப்போல்.
குழந்தையின் மென்ஸ்பரிசம்போல்,
மகரந்தம் சுமக்கும் தென்றலைப்போல்
மெல்லிய பட்டின் இழைகளைப்போல்,
எங்களை உயிர்வரை
தழுவிச் செல்கிறதுஅவர்களின்
ஆகர்ஷம் மிகு பார்வைகள்.
உயிர்ப் பூக்கள் சிலிர்த்து
எழுந்துசுவாசப்பைகளை அடைக்கின்றன
.காதலும் காமமும் தொடாத
சிகரங்களில் உறைகிறது காலம்.
நேர்த்தி மிகுந்த விளிப்புகள்,
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள்,
எனக்கே எனக்கேயானதாகிறது.
எனது செவிகளை, புலன்களைசெயல்களை
வருடி நிறைக்கிறது.
இனி என் வித்துக்கள்
உனது நிலங்களில்மட்டுமே
விதைக்கப்படும்.
நடுநிசிக் களவில் உயிர்க்கும்
முகமற்று நொதிக்கும் வாழ்வு.
விடிந்தபின் விரியும்கள்ளிப்
பாலையின் வெடித்த நிலங்கள்.
புழுதிக் காற்றில் அலையும்காய்ந்த
விந்துகள்வண்புணர்வில்
புழை கிழிந்துகதறும் சிறுமியைப்போல்
மருண்டு அழுகிறேன்
இருண்மையின் இருள்
சூழ்ந்த பகல்பொழுதுகளில்உனது
வித்துக்கள் எப்போதும்
வேலிகளைத் தாண்டுவதே இல்லை.
-கனிமொழி

3 comments:

said...

இடைவெளி கொடுத்து எழுதுங்க..படிக்க சுவை கூடும்..

said...

தலைப்பும் இருந்தால் எதைப் பற்றி எழுதியிருக்கிறார் எனப் புரிந்திருக்கும்..

said...

நான் படித்ததிலும் தலைப்பு இல்லை மன்னிக்கவும் அடுத்த முறை இப்படி நிகழாவண்ணம் இருப்பேன்