தலைப்பு வையுங்கள்


இரவுகளில் விழித்திருக்கும்
உனக்கு எப்போதேனும்
என் ஞாபகம் வருவதுண்டா?
சில காத தூர பயணங்களில்
உன் கண்களிடம் இருந்து
விடுபட முடியாது
கண்ணீருடன் நான் செல்லும்
வழிப்பாதை நோக்கியபடி
அமர்ந்திருக்கும் உனைக் கண்டால்
எனக்கு இப்போதும் சிரிப்புத்தான்
வருகிறது நீயும் நானும்
வேறு வேறு பாதையில் பயனித்த போதும்
ஒருமுறை கூட
பாதை தவறியதில்லை
சில நேரங்கள் நமக்குள்
இருக்கும் அன்பை வெளிப்படுத்த
முடியாது விழிகளுள் மட்டும்
பேசிக்கொள்வோம்
யாருக்கும் தெரியாமல்
அது
விடியும் வரை என்றால் கூட
என் எண்ணங்களோடு
நீ மாறுபட்டாலும் என்னோடு
எப்போதுமில்லை
உன் சின்ன விழியில்
எப்போதும் தெரியும்
சந்தோஷம் என்னை பார்த்ததால்
என்று நான் தப்பாகவே
இப்போதும் நினைக்கிறேன்
உனை மறுமுறை பார்த்தால்
கட்டிக்கொண்டு அழுவேனா
தெரியாது
நிச்சயமாய் பேச்சுவராது
-மகேந்திரன்.பெ

0 comments: