லாதாவின் கவிதைகள்

எதிர்பாராதபொழுது

பட்டாம் பூச்சியாய்ப் பறக்கும்
உன் துடிப்பில்எத்தனை யுகங்கள்
உயிர்த்திருந்தேன்
சிலிர்க்கும் புயலாய்உன் வேகம்

என் கணங்களைஅர்த்தப்படுத்தின
அன்று இரவு கண்ணாமூச்சி

விளையாடிக் கொண்டிருந்தபோதா
உன் கால்கள் வளர்ந்தன?
நீ பொறுக்கி வந்த உடைந்த பொருட்களும்

தெருச் சண்டைகளும்
இன்னமும்ஒட்டப்படாமல் கிடக்கின்றன
உனக்கும் நிலவுக்கும் உருட்டி வைத்துள்ள

சோற்று உருண்டைகளை
என்ன செய்யட்டும்?

அணுசக்தி

கடைந்த பாலில்மிதக்கும் வெண்ணெய்
சுழற்றச் சுழற்றத்திரண்டெழும்
தொட்டும்தொடாமலும்ஒரு சிறு நரம்போடும்

நுண்ணிய வாசம் கிளர்ந்தெழஉயிர் ஊறும்
ஒன்றாய் பத்தாய் ஆயிரம் ஆயிரமாய்

அணுக்கள் பெருகப் பெருக
எங்கும் பால் மணக்கும்
வலி ருசிக்கும் அற்புதத்தை

அறிவாயோ என் பூவே?
தெருவெங்கும் ஓடிதிசையெங்கும் கூவி

இறக்கை விரிக்கும் உலகம்
எல்லாம்எல்லோரும்வண்ணத்துப் பூச்சிகள்
எத்தனை கோடி இன்பம்!
அணுவைத் துளைக்கத்தாங்குமா

என் சிறு பூ?
ஒரு நொடியில்மூச்சடைத்து

வீழ்ந்து மரிக்கும்கரப்பான் பூச்சி

திணைப்புலன்

தீக்கிளறும் உராய்வுகளைக்கவனத்தோடு

தவிர்த்தபடிதெருச் சுவரில் அமர்ந்தோம்
வழமைபோல் அன்றும்வழிபாடு

எங்கள் முகங்களைக் கீறியிருந்தது
பாவத்தின் பிறப்பாகிய நீக்களே

பூமியின் பாரம் தாங்க வேண்டும்
வேதங்கள் வேறு என்றாலும்சாரம் ஒன்றுதான்.
தெருவை மறைத்த புகை மூட்டத்தில்

மறுபுறம் இருந்தவள் உரத்துப் பாடினாள்
தளதளத்திருந்தது வயல்சப்பாத்துக் காலுடன்

அவர்கள்வயல் அழிந்தது நிலமும் அழிந்தது
முகம் சிவந்து தெரு பதுங்கநாங்கள் கிளம்பினோம்
பனிக்காலத் தோற்றமெனநகரை நிறைத்த

நுரைப் பஞ்சுகளும்சாலை மரங்களின்
வண்ண மின் பூக்களும்காற்றைச் சூடேற்றின
நகரம் உறங்கிய பின்உலாக் கிளம்புவது

தேவதைகளா? சைத்தான்களா?
என்றபடி எதிரில் இவன்
அன்றைக்குத் தீ மூட்டசிக்கிமுக்கிக்

கல் தேடும் இவனிடம்இனியும் தோற்பதற்கில்லை
இரவுக்குள் ஒளிந்திருந்த
அவள் கண்களைத் தேடி எடுத்தேன்
'எந்தப் போருமே
முடிவற்ற போர்களையே தொடங்கி வைக்கிறது'

அவள் பனி மூட்டினாள்காலம் கலைக்காத தடங்களை
அதில் எரித்தாள்யுகங்களாய்நடந்த களைப்பில்
நொந்த பாதங்களைத் தன்கூந்தலால் நீவினாள்
ஊரடங்கு உடைத்துப் புறப்பட்டோம்

நிழலில் கட்டுண்டிருந்த வீடுகளை
அவிழ்த்துவிட்டபடியே நடந்தோம்
இரவுகள் பல கடந்துவந்தது அவள் வீடு.
சுவர்கள் அற்ற அதனுள்ளேஅறைகளும் இல்லை
காற்று இழைக்கும் அரங்கில்ஆடலாம் வா
காற்சிலம்பு களைந்து நாங்கள்வான்வெளி

இறங்கவிடிந்தது பொழுது.

லதா சிங்கப்பூரில் வாழும் தமிழ்க் கவிஞர். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு
'பாம்புக் காட்டில் ஒரு தாழை' யிலிருந்து

ஆலியோடு தூங்கும் தனிமை


ஆலியோடு தூங்கும் தனிமை
சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்தண்ணீர்த்
திவலை மிதித்துபடியேறும் தனிமை
மெழுகுத் திரி வெளிச்சத்தினடியில்

கருமையாய்த் தேங்கி நிற்கிறது
பின் என்னோடு நடந்தபடி என்ன

பேசுவதெனத் தெரியாமல் தயங்குகிறது
தேனீர் தயாரிக்கையில்

' எனக்கு ' எனக் கேட்கக் கூடாதா
அது என்றும் தேனீர் அருந்துவதேயில்லை
பூக்கள் மிதக்கும் தாழியில்

தாமரை மகரந்தத் தலத்தில்
தலை சாய்க்கிறது
ஆலிக்குட்டியின் மூச்சருகே போய்

தூங்கிவிட்டதா எனத் தொட்டுப் பார்க்கிறது
தனிமை என் நாய்க்குட்டியை

அணைத்துக்கொண்டு தூங்கப் பிரியப்படுவதை
உணரும் வேளை
கசிந்துருகும் மெழுகுச் சொட்டுகள்

கண்ணுக்குள் விழுந்து உறைந்து
உதிர்கின்றன
அதன் பிறகும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்

தனிமை என் வீட்டுக்குள் இடம்மாறி இடம்மாறிப்
படுத்துறங்குவதை.

வெறுமை
உன் படுக்கையறைக்குள்
தொங்கும் வெற்றுத் தூக்கணாங்குருவிக் கூடோ
கடைசித் துளிக்குப்

பிந்திய மதுக் கோப்பையோ
என்றேனும் சொல்லியிருக்கிறதா

என் வெறுமையை.

-ரோஸ்லீன்

ரோஸ்லீன் கவிதைகளுக்கான நன்றிகள்: தோழி.காம்

தீ விரித்த திசையில்


தீ விரித்த திசையில்
வெளிச்சக் கிளை நகர்ந்து செல்கிறது
கருப்பு இலைகள் அசைந்து போய்

அதில் பதிகையில் பெருகும் நட்சத்திரங்களாய்
பூக்கள் ஊறுகின்றன
எல்லாப் பூவுக்குள்ளும் வெளிச்சம்

கனலுகிறது
உதிரும் தீப்பொறிப் பூக்கள்

மின்மினிகளாய் உருப்பெற்று
சிறகுகளால் வானத்தின்
பாதத்தையும் பூமியின்
உச்சியையும் தொடுகின்றன
இலைகளும் பூக்களும்

அற்றுப் போகுமொரு அவகாசத்தில்
அக்கிளை வேர்களின் நினைவை
அருந்துகிறது
அங்கே கசப்பாக ஓடுமொரு நதியில்

கங்கு போல் விழுந்து
கண்கள் பொங்கும்போது
சாம்பலாய்த் திறக்கிறேன் இமைகளை

-ரோஸ்லீன்

எனக்குள்ளிருக்கும் காடு


அந்தியில் ஆழ் மனதிற்குள்
வடக்கு நோக்கியே அந்த
மலை படுக்கிறது
அதன் பாதத்தின் விரல்களில்

மழைக்கால மரங்கள்
அசைந்துகொண்டேயிருப்பதால்
தூக்கமேயில்லை
கால்களின் நரம்புகளாய்

காட்டுக் கொடிகள் பற்றிக் கிடப்பதை
ஓயாமல் பேசித் திரியும் எனது
நரம்புகளுக்குள் ரத்தம் பச்சை நிறமாகிப்
போனது யாருக்குமே தெரியாது
இதற்கான பிரார்த்தனையைக் கூட

முழங்கால்களுக்கிடையே சிக்கிக்
கிடக்கும் பாறையில் அமர்ந்துதான்
பேசிக்கொள்கிறேன்
பறவைகள் அந்தி உணர்வது போல்

அந்நேரம் இருள் அரும்புகையில்
புல்மேடுகளில் பனித் துளிகள்
நடுங்குகின்றன
லீலிப்பூ இடை நீரோடையில்

எதையோ தேடுகிறேன்
கரையெங்கும் கூழாங்கற்கள்

உதடுகளாய் சிதறிக் கிடக்கின்றன
அந்த உதடுகளை
அள்ளிச் சுவைத்து முத்தமிட்டுக்
குளிக்கிறேன்
தனிமையைத் தந்துவிட்டுப்

போனவனின் உதடு போல
அல்ல
அவை உறைந்த காலக் குளிர்
அவற்றில் முகம் வைத்து

மரங்களடர்ந்த மார்பில் சாய்ந்து
முத்தமிட்டவாறே தூங்க நினைக்கிறேன்
கிழக்கு நோக்கிப் படுக்கிறது

அந்த மலை

-ரோஸ்லீன்

Test Page


TEST PAGE test page

சே குவேராவுக்காக


நீ பிறந்த தேசம் வேறு
உன் மொழி வேறு-
தொழில் வேறு
உனக்கிருந்த ஆவல் வேறு
எங்கோ ஒரு தேசத்தில்
ஏழ்மை தெரியாமல்பிறந்த நீ -
எதிர்முனை ஆள்பவரின்
என்னச் சிறைகளை
தகற்த்தெறிந்தாய் வாய்ச்சொற்க்கள்
பேசாமல் உன்
தோள்பட்டைதோட்டாக்கள்
பேசிய வார்த்தைகள்
ஆயிரம்
தொழு நோயாளிகளுக்காய் -
நீ அலைந்த தென்னமெரிக்க
சாலைகளை விட உன்
கனவு மிகநீண்டிருந்தது-
உனக்கிருந்த ஆஸ்துமா கூட
உன்னை தாக்கிய போது
நோய்பட்டிருக்கும்
சுதந்திரமில்லா தேசங்கள்
தேடி சுதந்திரமாய்சுற்றிய நீ
கம்யூனிசம் என்பதன் ஒரே
அர்த்தம்
காம்ரேடு என்பதற்கு
முழு முகவரி
உன் பொலிவிய நாட்குறிப்பு
கூறுவது போல் ஒரு
முடிவற்ற பயணி நீ
உனக்குள் இருந்த போராளி
விழித்த போது உடன் விழித்த
தேசங்களை எண்ண விரல்கள்
போதாது.
நீ பயணம் செய்த பாதைகளில்
இருப்பவை வரலாற்று மைல் கற்கள்.
பிறந்த தேசம் வேறெனினும்
நீபோராடிய நாடு உனக்கு பதவி
தந்தது எல்லாம் தந்தது நீ
தேடிய ஒன்றை தவிற
உலக விடுதலை
காங்கோ காடுகளுக்கும்
உனைதுளைத்த அந்த
கள்ள தோட்டாவுக்கும்
வாயிருந்தால் சொல்லும்
அது பெற்ற
பெறும் பேற்றை.
-மகேந்திரன்.பெ

தலைப்பு வையுங்கள்


இரவுகளில் விழித்திருக்கும்
உனக்கு எப்போதேனும்
என் ஞாபகம் வருவதுண்டா?
சில காத தூர பயணங்களில்
உன் கண்களிடம் இருந்து
விடுபட முடியாது
கண்ணீருடன் நான் செல்லும்
வழிப்பாதை நோக்கியபடி
அமர்ந்திருக்கும் உனைக் கண்டால்
எனக்கு இப்போதும் சிரிப்புத்தான்
வருகிறது நீயும் நானும்
வேறு வேறு பாதையில் பயனித்த போதும்
ஒருமுறை கூட
பாதை தவறியதில்லை
சில நேரங்கள் நமக்குள்
இருக்கும் அன்பை வெளிப்படுத்த
முடியாது விழிகளுள் மட்டும்
பேசிக்கொள்வோம்
யாருக்கும் தெரியாமல்
அது
விடியும் வரை என்றால் கூட
என் எண்ணங்களோடு
நீ மாறுபட்டாலும் என்னோடு
எப்போதுமில்லை
உன் சின்ன விழியில்
எப்போதும் தெரியும்
சந்தோஷம் என்னை பார்த்ததால்
என்று நான் தப்பாகவே
இப்போதும் நினைக்கிறேன்
உனை மறுமுறை பார்த்தால்
கட்டிக்கொண்டு அழுவேனா
தெரியாது
நிச்சயமாய் பேச்சுவராது
-மகேந்திரன்.பெ

நன்றியுள்ள உனக்கு


தினசரி காலையில்
எழுந்திருக்கும் வேளைகளில்
காலை சுற்றி வந்து வட்டமிடும்
உன் கண்களில் தெரிவது
பசிமட்டுமா? இல்லை
அது இன்னோர் சுகானுபவம்
காலில் கிடப்பதை கழட்டி
அடித்துதுரத்திவிடலாம் என்றே
சில
கோபமான தருனங்களில்
எண்ணுவதுண்டு
நீ மறுமுறை என் கால்தொட்டு
நுகருகையில் உன்
கண்கள் கேட்கும் கேள்விகளுக்கு
என் வார்த்தைகளால் பதில்சொல்ல
இயலாது போகுமே
அதுஎண்ணி சில நேரம்
நானும் பொருத்துப்போவதுண்டு
உன் சங்கடமான சில சந்தோஷங்கள்
என் கல்லடி பட்டு காயமாகி இருக்கும்
உனக்கு நல்ல வேளையாக
ஞாபகசக்தி அதிகமில்லை
ஆனால்
உனை வேறு யாரும்
கல்லெரிந்து விட்டால்
உனக்கு பதிலாய் நானே
அவர்களை கடித்து
குதறிவிடலாமா என்றிறுக்கும்.
சில மனிதத் தோல் போர்த்தி
உன் வேடமிட்டு வருபவர்கள்
நல்ல வேளையாக
எனை அதிகம்
நெருங்க வில்லை
ஒருவேளை அவர்கள்
உண்மையிலேயே
உன் இனமாய் இருக்கக் கூடும்
இப்படிக்கு.....
நன்றியுடன் நானே.

ஜெ(எ)ன் கவிதை !


ஜெ(எ)ன் கவிதை !

மரங்களை அதன்
கனிகளில் இருந்து
பிரித்தறிய கற்றுக்கொள்
நல்ல மரங்கள்
நல்ல கனிகளைத்தரும்

யாழினி கவிதைகள்


எத்தனை புரண்டாலும்
உடலில் ஒட்டாத கடல் மண்போலவே இருக்கிறது
எனக்கும் இந்தநகரத்துக்குமான உறவு.
நினைவு தெரிந்த நாள்முதலாய்
தன் அளவுக்கு மீறியவளர்ச்சியை
என் மீதுதிணித்துக்கொண்டிருக்கிறது
இந்த நகரம்.என் விருப்பங்களையும்
மீறிஎன் வாழ்க்கையைநிர்ணயிக்கின்றன
இந்த நகரத்தின்இயந்திரத்தனங்கள்.
எவ்வளவோ முயன்றும்
எந்தபுனித நதியிலும் கரைக்கமுடிவதில்லை
சதா என்மீதுஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த நகரத்து எச்சங்களை

மிக இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கிறது
இந்தஉரையாடல்.
வழக்கமான அன்புப்பரிமாறல்களுக்கடியில்
திரை போட்டு உட்கார்ந்துகொண்டிருக்கின்றன,
கொஞ்சம் பிரிவுத் துயரும்
சில கண்ணீர்த் துளிகளும்.
நாளை இந்த நேரம் இருக்கப்போவதில்லை
இது எதுவும்.நீ இல்லாத
இந்தக் காலத்தில்எது வேண்டுமானாலும்
நடக்கலாம்.நீ விலகியிருக்கும்
தூரத்துக்குஏற்பதனிமையில்
சுமை கூடிஎன்னை அழுத்திசிதைக்கலாம்.
நீயற்ற தைரியத்தில் கால்முளைத்து
நடமாடலாம்
புதைக்கப்பட்டிருக்கும்
எனதுசில பயங்கள்.
எனக்கு நானே ஒரு
கல்லறையை
வடிவமைத்துக்கொண்டிருக்கலாம்.
இது எதுவுமே நடக்காமலும்
போகலாம்.

கனிமொழி கவிதைகள்மூடிய விழிகளைத் தாண்டி
துளைக்கின்றது குத்திட்ட பார்வை
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது
புன்னகை.சொல்லொணாப்
பதற்றங்கள்நிறைக்கின்றன என்னை.
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்
குருதியில் தோய்த்த
கத்திகளைகருத்த உதிரத்தின் நெடியோடு.
குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும்நிறைந்த அறைக்கு
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பதுஉன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடுநடந்த
சாலைகளை.
ஓய்ந்து விரிந்த இரவுகளில்கனவாய்
வேண்டுதலாய் யாசித்துசிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம்சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்துபேழைகள்
திறக்கின்றனபேய்களும்
தேவதைகளும்ஒருங்கே
அலையும்காடுகளில் முகையும்பூக்களின்
மணம்திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித்துவளும்
கரங்கள்.
-கனிமொழி

விழி நிறையவிடியும் என்ற
கனவுகளோடு காத்திருக்கிறோம்.
வழி நெடுகிலும் நட்சத்திரங்களின்
அணிவகுப்பு.
தங்கத் தாரகைகள், புதிய சூரியன்கள்
புயல்கள், காட்டாறுகள்,சிகரங்கள்,
மாவீரர்கள்,அறிவுஜீவிகள், அறிஞர்கள்.
வாய் பிளந்து நிற்கிறோம்.
பொங்கிப் பிரவாகமாகும் நெகிழ்ச்சியோடு
சிலிர்த்து,உச்சம் தொடும் உணர்வோடு,
வெடித்து வானம் கிழிக்கும்வாத்தியங்களோடுகாய்ந்து
சிறுத்த நாபிகள்கிழித்துச்
சிதறும் வாழ்த்தொலிகள்
.குளிர்ப் பொய்கையைப்போல்.
குழந்தையின் மென்ஸ்பரிசம்போல்,
மகரந்தம் சுமக்கும் தென்றலைப்போல்
மெல்லிய பட்டின் இழைகளைப்போல்,
எங்களை உயிர்வரை
தழுவிச் செல்கிறதுஅவர்களின்
ஆகர்ஷம் மிகு பார்வைகள்.
உயிர்ப் பூக்கள் சிலிர்த்து
எழுந்துசுவாசப்பைகளை அடைக்கின்றன
.காதலும் காமமும் தொடாத
சிகரங்களில் உறைகிறது காலம்.
நேர்த்தி மிகுந்த விளிப்புகள்,
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள்,
எனக்கே எனக்கேயானதாகிறது.
எனது செவிகளை, புலன்களைசெயல்களை
வருடி நிறைக்கிறது.
இனி என் வித்துக்கள்
உனது நிலங்களில்மட்டுமே
விதைக்கப்படும்.
நடுநிசிக் களவில் உயிர்க்கும்
முகமற்று நொதிக்கும் வாழ்வு.
விடிந்தபின் விரியும்கள்ளிப்
பாலையின் வெடித்த நிலங்கள்.
புழுதிக் காற்றில் அலையும்காய்ந்த
விந்துகள்வண்புணர்வில்
புழை கிழிந்துகதறும் சிறுமியைப்போல்
மருண்டு அழுகிறேன்
இருண்மையின் இருள்
சூழ்ந்த பகல்பொழுதுகளில்உனது
வித்துக்கள் எப்போதும்
வேலிகளைத் தாண்டுவதே இல்லை.
-கனிமொழி

‘‘லவ் பண்ணுடா மவனே... லவ் பண்ணுடா!


சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப்
பிறகுமீண்டும் உனக்கொரு
காதல் கடிதம்
.உன் விலாசம் எப்படியும்
மாறும்என்ற காரணத்தினாலோ
என்னவோஉனது
விலாசத்தை காதலி
என்பதோடுஅன்று
விஸ்தீரணம் செய்யாது
விட்டுவிட்டேன்.
காதலி...

மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய

கடிதம்உனக்கல்ல எனினும்
இத்துடன்அதையும்
இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம்

பார்ப்பதுஅனாசாரமாகாது
. பார்த்துப் புரிந்துகொள்.
பழைய கடிதத்தின்
சொந்தக்காரியிடம்இந்தக்
கடிதத்தைக் காண்பிக்க
வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க
வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை

. ஆள் மாறினாலும்இல்லாள்
மாறினாலும் காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும்

காதலில் கூடுவதும்இருவேறு
நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன்
எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும்
மிருகத்தனம்மனிதனுக்கே
உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று

. பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான
மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம்
குறைந்து வருவதை
உணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என்

(நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம்

பூண்டவர்கள்சமிக்ஞை
செய்துகவிதையை
வைக்கிறார்கள்.
நான் காதலன்

கவிஞன்ஆதலால்
காதலால்
மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும்

விலாசமில்லாமல் விட்டிருப்பதுவிபத்தல்லநீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறாய்
நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!

கமல்ஹாசன் கவிதை


நன்றி - ஆனந்த விகடன்

கவிதை

கவிதை

திருப்பித்தாநீ யாரென்று
எனக்கு தெரியாது
உன் பெயர் என்ன வயதென்ன
உன் குரலோசை
எதுவும் எனக்கு தெரியாது
உன்னை இரண்டு நிமிடத்துக்கு

மேல்
நான் பார்க்கவில்லை
உன் முகவரி தந்தை பெயர்
எதுவும் அறியேன்
உனை பார்த்த

அந்த நிமிடம் கூட
நினைவில்லை
பேருந்தின்

சன்னல் ஒரமிருந்து எனை
பார்த்து புன்னகைத்த
நீ

மீண்டும் ஏதேனும்
ஒரு கணத்தில் எனை
சந்திக்க நேர்ந்தால்
திருப்பித்தா
உன் விழிமேல்

ஒட்டிக்கொண்ட என்
பார்வையை

பழைய காதலிக்கு


உன்
ஒற்றை வார்த்தையில்
எனைவிட்டுப்
பிரிவதாக கூறி
என் மனத்தை
ரணமாக்கினாய்;
சில தருணங்களில்
நாமிருந்த கணங்களை
மறந்துபோனதாக
கூறி என்
நிகழ்வுகளை
கேள்விக்குள்ளாக்கினாய்
உன் கண்ணில்
என் இரட்டை இதழ்கள்
பதித்தசத்தமில்லா
முத்தத்தை -
நெற்றி வகிட்டில்
நித்தம் ஓடிய என்
சுட்டு விரல் தடத்தை
உன் எடுப்பான நாசி
மேல் தினம் மேய்ந்த
என் கருத்த மீசை
மதற்த்த உன் மார்பில்
பதித்த என்
நகக்குறிகளை
இப்படி எதை
வேண்டுமானாலும்உன்னால்
மறக்க முடியும்
என்னை?

ஒரு புறநாற்று புதுக் கவிதை:


ஒரு புறநாற்று புதுக் கவிதை:
என்னால்
உன்னை
தூக்க முடியவில்லை
உன் மார்பு நல்ல அகலம்
நீ கிடக்கும்
நிலையை பார்த்து
அய்யோ என்று
சத்தமிட்டால்
புலி வந்துவிடுமோ
என்றுபயமாய் இருக்கிறது
உன்னை இப்படி செய்த
விதியும் என்னைப்போல்
அல்லல் படட்டும்
என் வளைக்கரத்தை
பற்றிக்கொள் அந்த
மலை நிழல் வரை
போய்விடலாம்மெல்ல நடந்து

நன்றி: சுஜாதா

உன் பெயர்என்னோடு இருக்கும் நீ..
நீ எப்போது
என் வீட்டுக்கு வந்தாலும்
மழையை கூடவே கூட்டிக்கொண்டு
வருவதாக
அம்மா சலித்துக்கொள்வாள்
உன்னை பார்ப்பதற்கு
அலைவதாலேயே
மதிய சாப்பாடு
இல்லாமல் மெலிந்துபோனதாக
அக்கா கிண்டுவாள்
என் இரவுகள்
அத்தனையும் உன்
கனவு வருகைகளால்
தொலைந்தன
நீ அருகில் இருக்கும்
போதுதான்
எனக்கு தடுமன் பிடிக்கிறது
உன்சிற்றிடை தழுவும்
சூட்டில் என்
சிறுவயது ஞாபகம்
விழித்துக் கொல்(ள்)கிறது.
இப்போதும்
மழையில்லை
குளிரில்லை
ஆனாலும்
தடுமன்
காரணம்
சில்லிட சுவாசிக்கும்
உன் பெயர்

அனுப்பாத கடிதங்கள்


அனுப்பாத கடிதங்கள்
இதுவரை
சொல்லிக்கொண்டதில்லை
இருவரும்..
ஆனால்
அது நம் இரண்டுபேரைத் தவிர ;
எல்லோருக்கும்
தெரிந்திருந்தது
உன்னை தவிர வேறெதையும்
கண்டிராத என்
கண்களுக்குஉன்
கண்களில் இருந்த
காதல்மட்டும் தெரியாமல்
போனதெப்படி?
விழித்தெழுந்தால் வேண்டுமென்று
திருடிவந்த
உன் பேருந்து அட்டை
புகைப்படம்
கருப்பு வெள்ளையாய்
இன்னும் இருக்கிறது.
என்னிடம்...
ஒரு மங்கிய மாலை
பொழுதில்ஆற்று மணலில்
நீ தந்த அச்சிட்ட
பிறந்த நாள் வாழ்த்தும்..
அதன் பின்னொருநாள் நீ
படிக்கத்தந்த தபூ
சங்கரின் முத்தத்தை கேட்டால்
என்ன தருவாய்
புத்தகமும்
அத்துடன் இணைப்பாய் தந்த,
நான் புகைபிடிப்பதை
உனக்கு காட்டிக்கொடுத்த
முத்தமும்...
இன்னும் இருக்கிறது
என்னிடம்.
ஐந்தாண்டுகாலம்
அழிந்தது தெரியாமல்
அணைத்தபடியே
இருந்த சிலஇரவு
நேரங்களின்
திருவிழாநாட்களும்..
என்னிடம் சொல்ல மறந்த
உன்னைபோல்உன்னிடம்
சொல்ல மறந்த என்னையும்
இருவரும் வேதனித்துபார்த்த போது
காலம் வெகுதூரம்
சென்றிறுந்தது
இன்று உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவும் இல்லை.


இந்த கவிதை அந்திமழை இணையத்தில் வந்திருந்தது என் கவிதைகளை ஒரே இடத்தில் திரட்டும் பொருட்டு மீண்டும் பதியப்பட்டது.