யாழினி கவிதைகள்


எத்தனை புரண்டாலும்
உடலில் ஒட்டாத கடல் மண்போலவே இருக்கிறது
எனக்கும் இந்தநகரத்துக்குமான உறவு.
நினைவு தெரிந்த நாள்முதலாய்
தன் அளவுக்கு மீறியவளர்ச்சியை
என் மீதுதிணித்துக்கொண்டிருக்கிறது
இந்த நகரம்.என் விருப்பங்களையும்
மீறிஎன் வாழ்க்கையைநிர்ணயிக்கின்றன
இந்த நகரத்தின்இயந்திரத்தனங்கள்.
எவ்வளவோ முயன்றும்
எந்தபுனித நதியிலும் கரைக்கமுடிவதில்லை
சதா என்மீதுஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த நகரத்து எச்சங்களை

மிக இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கிறது
இந்தஉரையாடல்.
வழக்கமான அன்புப்பரிமாறல்களுக்கடியில்
திரை போட்டு உட்கார்ந்துகொண்டிருக்கின்றன,
கொஞ்சம் பிரிவுத் துயரும்
சில கண்ணீர்த் துளிகளும்.
நாளை இந்த நேரம் இருக்கப்போவதில்லை
இது எதுவும்.நீ இல்லாத
இந்தக் காலத்தில்எது வேண்டுமானாலும்
நடக்கலாம்.நீ விலகியிருக்கும்
தூரத்துக்குஏற்பதனிமையில்
சுமை கூடிஎன்னை அழுத்திசிதைக்கலாம்.
நீயற்ற தைரியத்தில் கால்முளைத்து
நடமாடலாம்
புதைக்கப்பட்டிருக்கும்
எனதுசில பயங்கள்.
எனக்கு நானே ஒரு
கல்லறையை
வடிவமைத்துக்கொண்டிருக்கலாம்.
இது எதுவுமே நடக்காமலும்
போகலாம்.

0 comments: