தீ விரித்த திசையில்


தீ விரித்த திசையில்
வெளிச்சக் கிளை நகர்ந்து செல்கிறது
கருப்பு இலைகள் அசைந்து போய்

அதில் பதிகையில் பெருகும் நட்சத்திரங்களாய்
பூக்கள் ஊறுகின்றன
எல்லாப் பூவுக்குள்ளும் வெளிச்சம்

கனலுகிறது
உதிரும் தீப்பொறிப் பூக்கள்

மின்மினிகளாய் உருப்பெற்று
சிறகுகளால் வானத்தின்
பாதத்தையும் பூமியின்
உச்சியையும் தொடுகின்றன
இலைகளும் பூக்களும்

அற்றுப் போகுமொரு அவகாசத்தில்
அக்கிளை வேர்களின் நினைவை
அருந்துகிறது
அங்கே கசப்பாக ஓடுமொரு நதியில்

கங்கு போல் விழுந்து
கண்கள் பொங்கும்போது
சாம்பலாய்த் திறக்கிறேன் இமைகளை

-ரோஸ்லீன்

1 comments:

said...

அன்புள்ள அனைவருக்கும் போஸ்ட் எ கமெண்ட்டின் கலரை மாற்றுவது எப்படி என்பதை யாரும் சொல்ல முடியுமா என் பதிவில் பாருங்கள் பார்த்தால் சரியாக தெரிவதில்லை அதன் கலரை மாற்ற யாரும் உதவுங்களேன் மற்றவற்றை தமிழில் மாற்றும் போது இதுமட்டும் மாறவில்லை காரணம் கூறினால் மகிழ்வேன்