வனதேவதை


பால்மேனிக் கொங்கைகள் பற்றியேறித்

தழுவி அணைக்கும் கொடிகள் உண்டு

ரகசியமாய் வெடித்துப் பரவி

ஈரமண்ணில் கருக்கொள்ளும் விதைகளுண்டு

ஏகாந்தமாய் அதிகாலை

உடலையே விரித்துப்போட்டு

ஒளியோடு புணரப் புணரச் சுவாசத்திலே

குழறி எழும் பறவைகளும் காண்பேன்

கள்ள மார்புகள் கூடிக்கழிக்க”

இரவின் மாயை

முதுமையிலும் புணரும் இச்சையில்

புடவையை மாற்றுவேன் வண்ணாத்திப் பூக்களாய்

என் புதருக்குள் நுழைந்தவனை

மீளவிடேன்

ஆணுறுப்பு மலையருவி

சொரிந்து நிறையவும் வழி தருவேன்

வனதேவதைக்குப் புருஷனில்லை

புரட்டிப் புரட்டிப் போகிக்க வழிப்போக்கர் எவருமுண்டு

உச்சியில் தீவிரமாய் ஒளி தேடி

நான் தரிக்க இலைகளின் மொழியுமுண்டு


-குட்டி ரேவதி

ஆகச் சிறந்த புணர்வுஆண் கடவுளின் சிறுநீர்


ஆண் கடவுளின் சிறுநீர்
மாதவிடாய் நாப்சின் இறுக்கத்தோடு

நடனமாடிய குலுக்கு நடிகையின்

தொப்புள்கண்திரைவிழியில் விரிய

வீரியமான குறி, குளமான நண்பனுக்கு

நடிகைகள் மலங்கழிப்பதைத்

தோன்றாமல் செய்யயோசனையில்

அவன் நடந்து செல்லும்போது

காக்கை எச்சமிட்டார் ஆண் கடவுள்

காக்கை எச்சம்நடிகை மலங்கழிக்கும்

அறையின்லோஷன் மணமாயிற்று.

திருப்தியோடு லோஷன்

மணவறைநீங்கிய கடவுள்தேசிய

நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று

மாதவிடாய்ப் புணர்ச்சி

ஆதாரப் புத்தகத்தைப்

படித்தவாறு நிமிர்ந்தார்

கேன்வாஸில் குலுக்குத் தொப்புள்

கடவுளுக்கு மலம் முட்டியது.

விளம்பரத்தட்டியின் உயர

நடுமத்தியில்அவர் மற்றொரு

காகமென எச்சமிட்டுச்சென்றதைப்

பார்த்த சாத்தான்சப்தமிட்ட

சிரிப்பில்சிக்னலில்

இருசக்கர வாகன விபத்தில்

இருவர் தலை நசுங்கிமரித்தனர்.

பூணூல் பார்ப்பான்சகுனம்

கரடு முரடாவதைக் காண

கடவுளின் சிறுநீரெனப்

பெருக்கெடுத்தோடியதுமூளை

நசுங்கி வெளியேறிய

மாதவிடாய் ரெத்தம்.

கேள்வி


மதுரை எரிகிறது.

மதுரை எரிகிறது.
மெரினாவில் நின்றவள்
யோசித்தாள்.
சிலையாய்.
கடல் காற்றில்
பறந்தது காகிதம்.
சிலம்பில் சிக்கியது
நெ. கொடுத்த முடிவுகள்
முத்துக்கள்.
மதுரை எரிகிறது.
மெரினாவில் நின்றவள்
யாசித்தாள்.
இளம் கோ விடம்.
அய்யோநீ எழுதாமல்
விட்டதால்அவர்கள்
புரியாமல் போனதால்
நான் வெறும் கல் பூ
ஆனேனடா கவி
இறந்தவர்கள் யார்
இளம் கோ?
இரண்டு பூவை
சூடிக்கொண்டவன்
ஏற்றினான் என்னை.
கல் பூஆக்கினான்
என்னை.
மதுரை எரிகிறது
இறந்தவர்கள்
யார் இளம் கோ?

மதுராவின் வலையில் இருந்து