KAMAL HASSAN


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்

நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே

வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,

விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.

எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,

இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

நன்றி- கமல்ஹாசன் - ஆனந்த விகடன்

48 comments:

said...

ஐயோ.. குழம்பிப் போனேன்.
ஒன்றும் புரியவில்லை

என்னத்தப் பற்றி எழுதி இருக்கிறார் எனது கமல்ஹாசன்?

said...

என்னங்க சொல்ல வர்றாரு.. ஒரு பொழிப்புரையும் போடுங்களேன்.

அன்புடன்
சீமாச்சு

said...

//என்னத்தப் பற்றி எழுதி இருக்கிறார் எனது கமல்ஹாசன்//

//என்னங்க சொல்ல வர்றாரு//

இருங்க இன்னும் யாருக்கெல்லாம் புரியலைன்னு பாக்கலாம் :)

ரொம்ப நல்ல கவிதைங்க இது

said...

Capital, சீமாச்சு.. இது புரியலைங்கறீங்களே.... இதுக்காகத்தான் அடிக்கடி நல்ல கவிதைகளையும் படிக்கணும்ங்கறது. :) இக்காலப் புதுக்கவிதைகளைப் படிச்சி ரொம்பவே கெட்டுப்போயிட்டீங்க. அது சரி. கமல் பேசறதே புரியலைன்னு சொல்வீங்க. இதுல கவிதை? சான்ஸே இல்லை.

மகேந்திரன். கமலிடம் எனக்கு இருக்கும் வருத்தமே, ஒரு சமூகப் பொறுப்பு இருக்கும் கலைஞன், இப்படிப் பூடகமாகப் பேசிக் கொண்டிராமல் வெளியில் வந்து நெஞ்சை நிமித்தி நம் அரசியல்வியாதிகளைப் பார்த்துக் கேள்வி கேட்பதில்லை என்பதுதான். இந்தக் கவிதையெல்லாம் "நாலைக்கு மலை வரும்" என்ற ரீதியில் தமிழ் பேசும் க'றை'வேஷ்டிகளுக்குப் புரியும் என்று நினைக்கிறீர்கள்?

என்னமோ போங்க ஸார்.

கவிதையைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

said...

வாங்க சுந்தர் அது நம்மாளுங்க பழக்கம் எங்கயாவது அப்படி போடு போடுன்னு சத்தம் கேட்டா அதில இருக்க வரிகளை வச்சி ஒரு ஆராய்ச்சி பன்னி டாக்டராயிடுவங்க, ஆனா இந்த மாதிரி கவிதைய கேட்டா பிகாபிப தான் எஸ்கேப்பூதான்

said...

//தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.//

ம்ம்.. தல தொட்டுட்டாரு..

(நாயகன் ஸ்டைலில்)
ஆஆஆஆஆஆஆஆ...
(தேவர்மகன் ஸ்டைலில்)
போங்கடா எல்லாரும் போயி வெவசாயம் பண்ணுங்கடா..

:)

said...

நம்ம தோஸ்த் மயிலை மன்னாரை இட்டாரணுமா?

:))

said...

லேசு பாசா புரியுது, பின்னால ரிப்பன் மாளிகை, முன்னால ரெண்டு பேர் சண்டை.

ஆட்சிபொறுப்பில்(லா) உள்ளவர்கள் பற்றிய கவிதை மாதிரி இருக்கு,

அய்யய்யோ என்னை விட்டுடுங்க...

எனக்கு ஒண்ணும் புரியல!

இப்பவே பத்து முறை படிச்சாச்சு,

வேற எடத்தில போய் வரவ சொல்ல வேணும்ல.

said...

அதுசரி எல்லாரும் தனித்தனி ட்ராக்கில் இங்க பேசுறீங்களா நானும் கொஞ்சம் வேலையால கவணிக்க முடியலை இருங்க உங்கள வந்து பாக்கிறேன் :))

said...

கவிதைக்கு என்ன தலைப்பு என்று போடவில்லையே?

said...

தம்பி.

//ஆட்சிபொறுப்பில்(லா) உள்ளவர்கள் பற்றிய கவிதை மாதிரி இருக்கு,//

நீங்க தம்பியில்லைங்க. அண்ணன்!!

ஆட்சிப் பொறுப்பா? எல்லா மு.க.வும் (முன்னேற்ற கழகங்களும்) அ.கொ.தீ.முன்னேற்ற கழகங்கள்தான். அ.கொ.தீ. ன்னா என்னன்னு கேக்கற ஆத்மாக்கள் சின்ன வயசுல காமிக்ஸே படிச்சதி்ல்லைன்னு அர்த்தம். :)

கவிதைக்குத் தலைப்பு என்னன்னு தெரியலை. ஆனா தலைப்பு வைக்கறது கமலுக்குப் பெரிய சவாலாக இருந்திருக்கும். வச்சாரா மகேந்திரன்?

said...

//போங்கடா எல்லாரும் போயி வெவசாயம் பண்ணுங்கடா//


சிறில் எல்லாருமே இப்படி வெவெசாயம் பன்றதாலதான் கமல் இந்த கவிதை எழுதிருப்பாரோன்னு தோனுது :)

யாருமே இன்னும் இந்த கவிதையை புரிஞ்சுகிட்டாப்ல தெரியலை பாப்போம் யாராவது கிட்ட வற்றாங்களான்னு நன்றிங்க அப்ப அப்ப வாங்க

said...

//மயிலை மன்னாரை இட்டாரணுமா//..

கடவுளே கடவுளே ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கவிதையை விளக்க மயிலை மன்னாரு இது நல்ல ஆலோசனை யாரங்கே,,,, எஸ்கே அய்யா த்ரும் யோசனையை இப்போதே செயல்படுத்தும்.... நன்றிங்க

said...

//கவிதைக்கு என்ன தலைப்பு //

கேப்பிடல் தலைப்பு இருக்கு நான் தான் எழுதவில்லை....
இப்பல்லாம் எல்லாரும் செலிப்ரடி மோகம்தானௌங்க இதே அந்த தலைப்ப வச்சா யாரும் படிக்க மாட்டாங்க இது கிண்டல் இல்ல வருத்தம் நன்றிங்க...
தலைப்பு : எமது நாயகம்

said...

//அ.கொ.தீ. ன்னா என்னன்னு கேக்கற ஆத்மாக்கள் சின்ன வயசுல காமிக்ஸே படிச்சதி்ல்லைன்னு அர்த்தம். :)//

தலைப்பு சொல்லியாச்சிங்க சுந்தர்:/ எமது நாயகம்.

சின்ன வயசில்ல இப்பவும் கூட காமிக்ஸ் படிக்கறேன் ஆனா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை மத்தவங்களுக்கு கவிதை புரியலை எனக்கு உங்க பின்னூட்டம் புரியலை :) வந்து விளக்குனீங்கன்னா நல்லா இருக்கும்.... நன்றி

said...

//உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே//


மகி! யாம் உமக்கு பின்னூட்டமிட்டதால், நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே!

ஒரு வேளை இது மருதநாயகத்தின் குருதவேதனையா?

//போங்கடா எல்லாரும் போயி வெவசாயம் பண்ணுங்கடா..//

என்னங்க சிறில்! எல்லோரையும் விவசாயம் பண்ணச் சொல்லுறீங்களா? ஹிம்ம்ம்... இதை மட்டும் "உலக விவசாயப்" புகழ் விவ் கேட்டாரு உங்களை டிராக்டரில் கட்டி வச்சே உதைப்பாரு!


அன்புடன்...
சரவணன்.

said...

http://www.blogger.com/posts.g?blogID=23705232

Long post! Hence the link!

said...

நம்ம எஸ்கே அய்யா இக் கவிதைக்கு மயிலை மன்னரிடம் விளக்கம் கேட்டு அதை பதிவும் போட்டாச்சு

said...

//மகி! யாம் உமக்கு பின்னூட்டமிட்டதால், நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே//

கடவுளே காபாத்து............

//ஒரு வேளை இது மருதநாயகத்தின் குருதவேதனையா?
//

சே சே அதெல்லாம் இல்லீங்க ... இது வேர

//டிராக்டரில் கட்டி வச்சே உதைப்பாரு//

ஏன் கட்டி வைக்கனும் அப்படியே மேல ஏத்துனா என்னா ?

said...

SK
உங்க பதிவ பாத்ததுமே இங்க வந்து பாத்தனுங்க ஒரு லிங்க் போடுங்க புண்ணியமா போகும்

said...

//ஏன் கட்டி வைக்கனும் அப்படியே மேல ஏத்துனா என்னா ? //


அப்புறம் சிறில் அலெக்ஸ் "சிதறிய அலெக்ஸ்" ஆயிடுவாரு!


அன்புடன்...
சரவணன்.

said...

அ.கொ.தீ. ன்னா என்ன? :-(

said...

அ.கொ.தீ. ன்னா என்ன? :-(

said...

அ.கொ.தீ. ன்னா என்ன?

said...

//அ.கொ.தீ. ன்னா என்ன? :-(

//

எனக்கும் தெரியலீங்க அதனால தான் கேட்டேன் ஆளே காணோம்

said...

//அ.கொ.தீ. ன்னா என்ன? :-( //

//சின்ன வயசில்ல இப்பவும் கூட காமிக்ஸ் படிக்கறேன் ஆனா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை//

காமிக்ஸ் படிக்கறேன்னு வெளில சொல்லாதீங்க. இது கூட தெரியலையான்னு குட்டீஸ்லாம் உங்களைக் கேலி பண்ணும்.

மந்திரவாதி மாண்ட்ரேக் கதையெல்லாம் படிச்சதில்லையா? அ.கொ.தீ.கழகத்தைச் சேர்ந்த வில்லன் கோஷ்டிங்களொட அவரும் அவரோட அசிஸ்டெண்ட் லோத்தரும் மோதுவாங்களே!

சரி சரி. அ.கொ.தீ.க.ன்னா அழிவு.கொள்ளை.தீமை.கழகம்! போதுமா? நம்மூர்ல இருக்கற எல்லாக் கழகங்களும் அ.கொ.தீ.க.தான்.

//மத்தவங்களுக்கு கவிதை புரியலை எனக்கு உங்க பின்னூட்டம் புரியலை //

கமல் சொல்றது மட்டுமில்லை கமல் ரசிகன் சொல்றதும் மக்களுக்குப் புரியாது. ஹிஹி.

said...

//யாருமே இன்னும் இந்த கவிதையை புரிஞ்சுகிட்டாப்ல தெரியலை //

ஒரு கண்ணில் வெண்ணெய் மறுகண்ணிலும் வெண்ணெயை வைத்துக்கொண்டு பார்வை மறைப்பதால் உண்மை தெரியாமல் இப்படி மனம்போன போக்கில் எழுதும் மகேந்திரனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

//கமல் சொல்றது மட்டுமில்லை கமல் ரசிகன் சொல்றதும் மக்களுக்குப் புரியாது. ஹிஹி.//

அப்ப நாங்கள்லாம் யாராம்? :))

said...

//மகேந்திரனை வன்மையாகக் கண்டிக்கிறேன்//

வாங்க "வாங்க" காத்திருக்கிறேன்

said...

அ.கொ.தீ.க.ன்னா அழிவு.கொள்ளை.தீமை.கழகம்! போதுமா?

இதான் எனக்கு தெரியுமே!

said...

அ.கொ.தீ.க.ன்னா அழிவு.கொள்ளை.தீமை.கழகம்! போதுமா?

இதான் எனக்கு தெரியுமே!

said...

//இதான் எனக்கு தெரியுமே! //


இதை முதல்லயே சொல்லியிருந்தா அவர தேடி அலைஞ்சிருக்க மாட்டனே

said...

இன்னிக்கு ஒண்ணூம் பதிவு இல்லயா?

வெய்ட்டிங்!

said...

//இன்னிக்கு ஒண்ணூம் பதிவு இல்லயா?

வெய்ட்டிங்! //


இன்னிக்கு தான் கலைஞரோட மார்க் சீட்டை போட்டனுங்களே ஆகா என்பதிவ படிக்கவும் ஒரூ ஆள் வெயிட்டிங்கா ரொம்ப நன்றிங்க தம்பி

said...

//அ.கொ.தீ.க.ன்னா அழிவு.கொள்ளை.தீமை.கழகம்! போதுமா?

இதான் எனக்கு தெரியுமே!

//

எப்படித் தெரியும்னு கேட்டா அவ்வை சண்முகி மணிவண்ணன் மாதிரி நீங்கதான இப்ப சொன்னீங்கன்னு சொல்வீங்க. எனக்குத் தேவையா?

அது சரி. மகேன் எங்கருந்து கமல் கவிதைகளைப் பிடிச்சீங்க? எதாச்சும் புத்தகம் வந்திருக்கா?

said...

//அது சரி. மகேன் எங்கருந்து கமல் கவிதைகளைப் பிடிச்சீங்க? எதாச்சும் புத்தகம் வந்திருக்கா? //

இல்லை நான் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகள் கட்டுரைகளை தனியே சேமிப்பதுண்டு இப்போது பதிவுகளுக்கு உதவுகிறது. ஆமா புதுசா ஒன்னு ரிலீசாயிருக்கே இன்னும் இங்கயே இருக்கீங்க?

நன்றி சுந்தர்

said...

//இல்லை நான் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகள் கட்டுரைகளை //

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!!

said...

//இல்லை நான் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகள் கட்டுரைகளை //

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!!

said...

//இல்லை நான் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகள் கட்டுரைகளை //

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!!

said...

//இல்லை நான் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகள் கட்டுரைகளை //

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!!

said...

//இல்லை நான் அவர் அவ்வப்போது எழுதும் கவிதைகள் கட்டுரைகளை //

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!!

said...

அதுசரி ..! அவரு எங்கயும் சேமிக்கலை நான் சேமிச்சி வச்சிருக்கேன் ஏது விட்டா அவரு லாக்கர் நம்பர் கேப்பீங்க போல? :)

said...

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!! //
அதுசரி ..! அவரு எங்கயும் சேமிக்கலை நான் சேமிச்சி வச்சிருக்கேன் ஏது விட்டா அவரு லாக்கர் நம்பர் கேப்பீங்க போல? :)

said...

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!! //
அதுசரி ..! அவரு எங்கயும் சேமிக்கலை நான் சேமிச்சி வச்சிருக்கேன் ஏது விட்டா அவரு லாக்கர் நம்பர் கேப்பீங்க போல? :)

said...

அவர் எங்க சேமிக்கிறார் சொல்லுங்க மகி!! //
அதுசரி ..! அவரு எங்கயும் சேமிக்கலை நான் சேமிச்சி வச்சிருக்கேன் ஏது விட்டா அவரு லாக்கர் நம்பர் கேப்பீங்க போல? :)

said...

:))))))))))0

said...

என்ன மகி மூணு முறை எக்கோ விடறீங்க?

ஸ்மைலிய போட்டா கயமைத்தனம் இல்லன்னு ஆயிடுமா?

said...

//என்ன மகி மூணு முறை எக்கோ விடறீங்க?

ஸ்மைலிய போட்டா கயமைத்தனம் இல்லன்னு ஆயிடுமா//

தம்பி நீங்க நாலு தடவை கேட்டீங்க அதனால தான் நீங்க வெளிய போயி அந்த மகி நாலு கேள்வி கேட்டா ஒரு கேள்விக்குதான் பதில் சொல்றாப்லன்னு சொன்னா மக்கள் நம்மல திமிர்பிடிச்சவன் போலன்னு நினைப்பாங்களா இல்லையா மத்தபடி பின்னூட்ட கயமை எதுவும் கிடையாது :_)