கண்ணஞ்சல்


சொல்ல மறுக்கும் உன்சின்ன மவுனத்துக்கு நடுவில்
என் சிறு சிரிப்பை பலிகொண்டாய்
ஊடல் என்று ஒதுக்கவும் முடியாமல்
கோபம் என்று கோபிக்கவும் இயலாமல்
இரண்டுக்கும் நடுவில் என்னை
இம்சை செய்கிறாய்
மிகப் பிடிவாதமாய்.

உன் உள்ளே இருக்கும் ஒரு
கண(ன)ப் பார்வை என்னை
இன்னும் கொஞ்சம் லேசாக்குமென்றால்
இம் மவுனத்தை இப்படியே தொடர்க
இறுதியில் சொல்ல ஏதேனும் வழியிருந்தால்
எனக்கொரு கண்ணஞ்சல் அனுப்பு

7 comments:

said...

சோதனைமட்டும்

said...

அருமை..

said...

நன்றி சிபா நம்மக்கள் பொதுவாகவே கவிதைகளையும் இலக்கியங்களையும் கண்டுகொள்வதில்லை

said...

அழகான கவிதை மகி..

said...

நன்றாயிருக்கிறது

said...

நன்றி சந்திரவதனா..

கப்பி உங்களுக்கும் நன்றி என்னாச்சு ஆளையே காணவில்லை? :)

Anonymous said...

மிக நல்ல கவிதை...


//கவிதைகளையும் இலக்கியங்களையும் கண்டுகொள்வதில்லை //

நல்ல குத்துப் பாடல் எழுதிப் பார்க்கவும்