நான் நீ


நீ
ஒவ்வொறு முறையும்
என் வீட்டைக் கடக்கையில்
எதையாவது
தொலைத்துவிட்டே
போகிறாயோ என்று
எனக்கு சந்தேகமாய்
இருக்கிறது
இல்லையென்றால்
என் தின்னையை கொஞ்சம்
திரும்பிப் பார்
தொலைத்த நான்
துவண்டு கிடப்பதை

8 comments:

said...

போட்டு இருக்கிற படத்தில் பார்த்தால் அவுங்க துணியைத் தான் தொலைத்திருப்பார்கள் போல் இருக்கிறது !
:))))

said...

நீ
ஒவ்வொறு முறையும்
என் வீட்டைக் கடக்கையில்
எதையாவது
திருடிக்கொண்டு
போகிறாயோ என்று
எனக்கு சந்தேகமாய்
இருக்கிறது
இல்லையென்றால்
என் திண்ணையை கொஞ்சம்
திரும்பிப் பார்
திருட்டுக்கொடுத்த நான்
திருதிருவென முழிப்பதை.

மகி!இது எப்படி இருக்கு.
உங்க கவிதைய கொஞ்சம் உல்டா பண்ணிட்டேன்.

said...

//துணியைத் தான் தொலைத்திருப்பார்கள் //

ஒரு வேளை அதைத்தான் தேடியிருப்பாளோ?

said...

//மகி!இது எப்படி இருக்கு.//

ராசா பின்னிட்டீங்களே ராசா கல்யாணமாச்சில்ல அதான் கொட்டுது :))

said...

// "ராசா பின்னிட்டீங்களே ராசா கல்யாணமாச்சில்ல அதான் கொட்டுது :)) " //

மகி,பதினாலு வயசிலே கவிதை எழுத ஆரம்பிச்சாச்சு.ஆனா என்ன செய்ய,
நீங்க சொன்னமாதிரி இனி எல்லாப்புகழும் இல்லாளுக்குத்தான். நம்ம கவிதைகளும் இனி வரிசையா வரும்.

said...

கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் வெச்சுப்பார்னு சொல்லி,
குடும்பத்துல குழப்பம் உண்டாக்குறீங்களே, கோவியாரே!
அவர் வொய்ஃப் இதைப் படிக்கணும்!
கரண்டியை எடுத்துக்கிட்டு வரணும்!
அதானே உங்க ஆசை!
செய்யுங்கப்பா....நல்லா செய்யுங்க!

said...

//என் தின்னையை கொஞ்சம்
திரும்பிப் பார்
தொலைத்த நான்
துவண்டு கிடப்பதை//

அது நீங்க போட்டுருக்கற படத்தைப் பாத்தாலே புரியுது.
:)

said...

//அது நீங்க போட்டுருக்கற படத்தைப் பாத்தாலே புரியுது.//

கைப்பு உமக்கு அங்க ஒரு கொஸின் கெடக்கு போய் அதப் பாருமைய்யா :)) இது என்னா புதுக் கூத்து ஆபாசத்தில் எம்மை ஆயாசமாக்கி விட்டீரே கைப்பு :))

//செய்யுங்கப்பா....நல்லா செய்யுங்க//
SK எதோ என்னாலான ஒரு உதவி :))

//எல்லாப்புகழும் இல்லாளுக்குத்தான்.//
அது சரி உங்க கடந்த காலத்தையும் (ஹி ஹி) அதுல சேத்துடாதீங்கப்பு எதாச்சும் ஆச்சுன்னா நான் பொறுப்பில்ல ஆமா