பொடியன்

நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்
யாருக்கென்று
புலிகளுக்கு தெரியும்
புல்லுருவிகளுக்கல்ல
நான் இந்த சாதியென்று
நீ சொல்லும் வேளையில்
சொல்லாமல் தெரியும் உன்
சாதியும்அதிலிருக்கும்
ஆணவமும் வெட்டிய
மரங்களும்மனிதமும்
ஒன்றாய் கணக்கெடுக்கும்
கோமானே
யாம்
நட்ட மரங்களை எண்ணிப்பார்
அதுசொல்லும்
எந்தன் உயிர்ப்பை
தமிழும் தமிழனும் திராவிடமும்
வேறு வேறென்றுபுலம்மும்
உன்போன்ற சில ....
அதுவல்ல என்வேலை
எனக்குண்டு ஆயிரம் பணிகள்
அதில் கொஞ்சமேனும்
சிந்திக்கஒதுக்குவதுண்டு
எதையும் உம்போல்
பிடுங்கவல்ல
எழுதியது என்னவென்று
விளங்காவிடின்முதலில்படி
அதைப் புரியவும் கற்றுக்கொள்
நான் பொடியன் என்றுஎனக்கும்
நினைவூட்டிய உன்அன்புக்கு
நன்றி
கொலையென்ன அதன்
விலையென்ன வென்று
எமக்கும் தெரியும்
எம் இனத்தைவிட
எவனோ பெரியவன் என
பிதற்றும் உனக்குகாலம்
பதில் சொல்லும்
ஆனால் கடினமாய்
எனை எதிர்க்க வேண்டுமெனில்
எழுதெனக்கு இனமிழுத்து
எழுதுவது எரியும்
நெருப்பு
எழுதுகிறேன் பின்னால்

9 comments:

Anonymous said...

பதிலுக்கு பதிலாய் கவிதைகள் எழுதி காலத்தை வீணாக்க வேண்டாம் உங்கள் கவிதை சொல்வது போல் கயவர்களுக்கு காலம் பதில்சொல்லும்
by
Dr

said...

காலம் எந்த காலத்திலும் தானா வந்து பதில் சொல்லாது. நடக்க வைக்கணும்.

said...

காலம் வந்து பதில் சொல்லாவிட்டாலும் காலத்துக்கு பதில் சொல்லவேண்டிய காலம் ஒன்று வரும்
நன்றி திரு பாலச்சந்தர் கணேசன்

said...

நீங்க எல்லாம் பெரியவங்க எங்களுக்கெல்லாம் வழிகாட்டியா இருப்பீங்க என்று பார்த்தால் நீங்களே எந்த சாதி உசத்தி என்று போட்டி போட்டு கொண்டு இருக்கிங்க. உங்களையெல்லாம் பார்த்துதான் நாங்கள் வளர்கிறோம் என்பதை கருத்தில் கொண்டு பதிவினை இடலாமே.

அன்புடன்
தம்பி

said...

மூலக்கவிதை எங்கேங்க அதுக்கு யாராவது சுட்டி கொடுங்களேன்...

said...

//தம்பி அவர்களே// சாதியில்லாமல் எழுதக்கூட விடமாட்டேன் என்கின்றனர் சில விடாகண்டர்கள் என்னுடைய சாதி இது என்று அவர்கள் சொல்கையில் அதில் என்னை அல்ல என் இனத்தை தாழ்த்தும் ஒரு அகம்பாவம் இருப்பதை அறிவீறோ?. இது வெளிக்குத்துக் கவிதை.

//குழலி// நன்றி குழலி ஆமாம் நீங்கள் கேட்பது மூளைக் கவிதையா மூலக் கவிதையா:)

said...

//ஆனவமும்//
//அதைபுறியவும்//
//நிணைவூட்டிய//
பதிவுகளில் கவனப்பிழையால் எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கவிதையில் இருக்கக்கூடாது என்று நினைப்பவன் நான்.

said...

நன்றி வசந்தன் மாற்றிவிட்டேன் இனி கவனமாக இருக்கிறேன்

said...

//ஆனால் கடினமாய்
எனை எதிர்க்க வேண்டுமெனில்
எழுதெனக்கு இனமிழுத்து
எழுதுவது எரியும்
நெருப்பு
//

சரியாட சாடல்!

ஏறி மிதித்திடு வாரென்றே எதிரி
அச்சம் கொள எழுதிடுவாய் நன்று!