இன்று எங்களின் திருமண நாள்

இக் கவிதை என் மனைவிக்கு
இன்று எங்களின் திருமண நாள்
05-07- 2002
இதே போலொறு நாளில் தான் என் + என் திருமணம் நிகழ்ந்தேரியது இது நான்காம் வருடம்

இன்னும்
எத்தனை காலம்
உன்னுடன் உன்னில்
கலைந்து கரைந்து
கிடக்கப் போகிறேன்
என்பதறியேன்
ஆனால்
உனை பிரிந்த
இந்த
சிறு இடைவெளி என் உன்
இடையே இன்னும்
நெருக்கம் தருவது நிஜம்
இன்னும் சில காலம்
நீயில்லாமல் நானும்
நானில்லாமல் நீயும்
தனித்தனியே திருமணவிழாவை
கொண்டாடக் கடவது
அப்போதாவது இன்னும்
நெருங்குவோம்
மனசால்


வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் நன்றிகள் பல

39 comments:

said...

இனிய திருமண வாழ்த்துகள் மகேந்திரன்

said...

நன்றி முத்துகுமரன் (துபாயில் தானே இருக்கிறீர்கள் முடிந்தால் தனிமடலில் தங்களின் தொலை எண் கொடுத்தால் நாளை தர எண்ணியுள்ள விருந்துக்கு அழைக்க ஏதுவாயிருக்கும். )
அன்புடன்
மகேந்திரன்.பெ

said...

மகேந்திரன்
வாழ்த்துக்கள்.

//உனை பிறிந்த //

உனை பிரிந்த என சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.

said...

வாழ்த்தியமைக்கு நன்றி வெற்றி
//பிறிந்த//
தவறுதான் மாற்றிவிட்டேன்
அன்புடன்
மகேந்திரன்.பெ

said...

அன்பு முத்துகுமரன் தங்களுக்கு நாளை நேரமிருப்பின் வருகைதருவீர்கள் தானே?
(தொலை பேசியிலும் வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல)
அன்புடன்
மகேந்திரன்.பெ

said...

நல்வாழ்த்துக்கள் அன்பரே. காலம் உங்களுக்கு மேலும் மேலும் செல்வங்களையும், மிகுந்த திருப்தியையும், எதையும் சார்ந்து நிற்காத வலிமையையும் கொண்ட நிறைந்த வாழ்க்கையை கொடுக்கட்டும்

said...

இனிய திருமண தின வாழ்த்துக்கள் மகேந்திரன்.

Many more happy returns of the day.

said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

said...

சென்வன் தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.( நட்சத்திர வாரத்துக்கப்புறம் அதிகமா எழுதவில்லையே ஏன்?) வேலைப் பளு?
அன்புடன்
மகேந்திரன்.பெ

said...

அன்பான மணநாள் வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க ரெண்டு பேரும்.

நமக்கெல்லாம் விருந்து அழைப்பு இல்லையா?

said...

இனிய திருமண தின வாழ்த்துகள் மகேந்திரன்

said...

நன்றி குழலி உங்கள் வாழ்த்துக்கள் இன்னும் சந்தோஷம் தருகின்றது (தாங்கள் சிங்கையில் இருப்பதால் தான் அழைக்கவில்லை :(
துளசி அக்கா உங்களின் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றிகள் பல இன்று துபாயில் ஒரு சிறு விருந்தளிக்க எண்ணம் தாங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதறியேன். மற்றபடி அழைக்க வேண்டாமென்றில்லை. வரமுடியாவிடினும் வாழ்த்துக்கள் உண்டென்பது அறிவேன்
அன்புடன்
மகேந்திரன்.பெ

said...

அடடா நீங்க நியூசிலாந்திதில இருக்கீங்க நான் துபாய்ல இருக்கிறேன் இப்போதுதான் உங்களின் புரொபைலை பார்த்தேன் நன்றி அக்கா

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பரே!
(காதல் கல்யாணமா?)
உங்களின் கவிதைகள் அதைத்தான் சொல்கின்றன!

said...

வாழ்த்துக்கு நன்றி அனானிமஸ் நீங்க ஒரு பேரப்போட்டு எழுதிருக்கலாமே?
(ஆம் காதல் திருமணமே இன்னும் காதலித்தே முடியவில்லை )

said...

வாழ்த்துகிறேன் நண்பரே + நண்பரே
(...காதலித்தே முடியவில்லை//)
காதலிப்பதற்கு ஓரு முடிவுமுண்டோ?

said...

வாழ்த்துக்கள். தி.ரா.மு.மு. சார்பில் முத்துக்குமரன் கலந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

said...

விருந்து அழைப்பிற்கு நன்றி நண்பரே. இன்று அலுவலகத்தில் பணி அதிகமிருப்பதால் வேலை முடிய தாமதமாகும்.(நள்ளிரவு). அதனால் என்னால் வர இயலாது. நாம் விரைவில் சந்திப்போம்.

said...

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் -
உங்கள் ஊரில் அடிமைகள் திருமணநாள் கொண்டாட அனுமதி உண்டா :-)

said...

இனிய திருமண வாழ்த்துகள் மகேந்திரன்

said...

திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே...
//காதல் திருமணமே இன்னும் காதலித்தே முடியவில்லை //
இன்று போல் என்றும் உங்கள் மனைவி மீதான காதல் தொடரவும்,உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவும் வாழ்த்துக்கள்.அன்புடன்...
சரவணன்.

said...

நன்றி சிவஞானம்ஜி //காதலுக்கு முடிவுமுண்டோ // இல்லை தான்

அருண்மொழி அவர்களே தங்களின் வாழ்த்துக்கு நன்றி //அடிமைகள்// இதென்ன புதுக்கதை நான் ஆண்டான் அய்யா ஆனால் யாரும் அடிமைப்பட விரும்பாதவன் இதுகுறித்து என் பதிவு இங்கே
http://kilumathur.blogspot.com/2006/06/blog-post_15.html

(முத்துக்குமரன் கலந்துகொள்ள இயலாது என தெரிவித்திருப்பது கொஞ்சம் வருத்தம் தான்)

நன்மணத்தின் வாழ்த்துக்கு நன்றிகள் பல

நன்றி சரவணன் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல

johan -paris said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.!
யோகன் பாரிஸ்

said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள் மகேந்திரன்! :)

said...

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் யோகன்
(கூகிள் எர்த்தில் இன்றுதான் பாரிஸை நன்றாக பார்த்தேன் - கழுகுப் பார்வை)

தனித்துவமான உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி இளவஞ்சி

அன்புடன்
மகேந்திரன்.பெ

said...

மண நாள் மன நாள் அதாவது மனதால் நினைக்கும் நாள் ஆகிவிட்டது என்று வருந்துகிறீர்கள். இறைதேடும் பறவை கூட்டிற்கு சென்று தானே ஆகவேண்டும். கவலைப் படாதீர்கள் காலம் வேகமாகவே ஒடுகிறது.

உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் நல்வாழ்த்துக்கள்

said...

மகேந்திரன்,
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழவும் சந்தோஷமாக வாழவும் வாழ்த்துக்கள்.

said...

நன்றி கோவி.கண்ணன் மணம் மனம் இரண்டுமே ஆயிரம் சதவிகிதம் உண்மை
(செந்தழல் ரவி தந்த பட்டம் கிடைத்ததா?:))

said...

நன்றி கீதா சாம்பசிவம் தற்போதுதான் தொலைபேசிவழியே செய்திகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன் வாழ்த்திய அணைவருக்கும் நன்றி
அன்புடன் மகேந்திரன்.பெ

said...

சென்று வருகிறேன் நண்பர்களே விருந்து ஏற்பாடுகளில் இறங்க வேண்டும் காலை வந்து எழுதுகிறேன்
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

said...

மகேந்திரன்,

திருமண நாள் வாழ்த்துக்கள்!!!

said...

திரு. சிவபாலன் அவர்களின் வாழ்த்து ப்ளாகரின் நெட்வொர்க் எரர் காரணமாக காணாமல் போனது
அவருக்கு என் நன்றிகள் பல

said...

வாழ்த்துக்கள் மகேந்திரன்.

said...

நன்றி சிபி நேற்று இரவு விருந்து நன்றாகவே முடிந்தது
( என் அக்காவின் மகன் பெயரும் சிபி ) என் மகன் பெயர் பாரி

said...

பாரியின் பெற்றோருக்கு கொஞ்சம் லேட்டான திருமண நாள் வாழ்த்துக்கள்....

said...

//நன்றி சிபி நேற்று இரவு விருந்து நன்றாகவே முடிந்தது
( என் அக்காவின் மகன் பெயரும் சிபி ) என் மகன் பெயர் பாரி
//


பழரசம் இருந்ததா விருந்தில்? :)

(சிபி, பாரி --> நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியுள்ளீர்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்)

said...

பதிவை தாமதமாத்தான் பார்க்க முடிந்தது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இருவரும் அருகிலிருந்தே மனதால் இணைய கடவுள் அருள் புரியட்டும்.

said...

பதிவை தாமதமாத்தான் பார்க்க முடிந்தது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இருவரும் அருகிலிருந்தே மனதால் இணைய கடவுள் அருள் புரியட்டும்.

said...

//பழ ரசம் இருந்ததா விருந்தில்// சொர்க்கம் மதுவிலே என்று குவாட்டர் கோவிந்தன் பாடுகிறார்.....
//பாரி, சிபி நல்ல தமிழ் பெயர்// இன்னும் இருக்கு பாருங்க

பெரிய அக்காள் -குந்தவி
சிறிய அக்காள் - மலர்விழி- சிபியின் அம்மா
குந்தவியின் குழந்தைகள்- இந்துமதி- இளமதி-வான்மதி

கலைஅரசன் லேட்டா வந்தாலும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.