ஒளிந்திருந்த முலைகள்


கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...

-முத்தாஸ் கண்ணன்

3 comments:

said...

:)

said...

kashtamaa irukkunga! aana ithai nirutha mudiyumaannu enakku theriyalai...athu thaan romba bayamma irukku!

Anonymous said...

யதார்தமா இருந்தாலும்.வெளிப்படையா பாராட்டமுடியலிங்க..மன்னிச்சிடுங்க.மகேந்திரன்.
இப்பவே ஆணுக்கும் முலை இருக்கு.ஆனா அதுக்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க மனித கலாச்சாரம் கத்துதரலை.