நாளை AUG-15 மற்றுமொறு நாளே


Photobucket - Video and Image Hostingவழக்கம் போல
கோயிலுக்குள்
நுழைய முடியாத,
பொதுக் குளத்தில்,
நீரருந்த
பொது இடத்தில்
டீ குடிக்க
காலிலே செருப்பனிய
காதலில் சாதிபார்க்க
நீதியில் பூனூல் பார்க்க
எல்லா வழிகளிலும்
இருக்கும் ஓட்டைகளை
எது வழியே சென்றால்
தப்பிக்கலாம் எனத்
தெரியாத உனக்கும்...

இருப்பது சிலபேர்தான்
யாம் சொன்னதே சட்டமாகும்
அர்ச்சகர் யாமே அன்றோ
நீ அதுபுறம் தள்ளிப் போவீர்
எப்புறம் சென்றாலும்
யாம் இச்சைகள் தவிற்க மாட்டோம்
நீசனின் பாஷை பேசும்
நீபேசவோ சாதி பற்றி
ஈசனும் எங்கள் சொத்து
அதை பேசுவோம்
நாங்கள் மட்டும்
மனு நீதி மட்டும் போதும்
இபிகோ எதற்கு என்னும்
சில பேடிகள் இருக்கும்
மட்டும்
உனக்கு
நாளை
மற்றுமொரு நாளே1 comments:

said...

அனைவருக்கும் இனிய 59ம் விடுதலை நாள் வாழ்த்துக்கள்