நாபிக்கொடி
அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி
சோதரி பல்முகி பாதகி
-கமல்ஹாசன்
12 comments:
மகி!
உன்னைக் கண்டிக்க ஆள் இல்லாமப் போச்சு!
தலைவனோட முதல் கவிதையே பிரியாமா அவனவனும் தலதலயா அடிச்சிகிட்டு இருக்கோம்!
நீர் என்னடானு அதுக்குள்ள 2nd இன்னிங்ஸ்க்கு ரெடியாய்டீர்!
அன்புடன்...
சரவணன்.
//தலைவனோட முதல் கவிதையே பிரியாமா அவனவனும் தலதலயா அடிச்சிகிட்டு இருக்கோம்!//
அதுக்குதான் எஸ்கே விளக்கம் போட்டாரே?
சீகிரம் முடிங்க இன்னிக்கே அடுத்த இன்னிங்ஸ் இருக்கு:))
முதல் கவிதையாவது எதோ லேசுவாசா புறிஞ்ச மாதிரி தோனுச்சு!
ஆனா இது சுத்தம், ஒன்னுமே பிரியல!
இந்தக் கவிதயக் கொண்டுபோய் மன்னாரு கைல கொடுத்தைனு வை! மவனே நீ கைமா தான்!
SK-இந்த xபிடஸிடம் கவனம் தேவை!
//சீகிரம் முடிங்க இன்னிக்கே அடுத்த இன்னிங்ஸ் இருக்கு:))
//
நண்பா! வேண்டாம் இப்பவே கண்ணக்கட்டுது!
இதுல இன்னவொன்னா முடியல!
அன்புடன்...
சரவணன்.
மகி!
ஒன்னும் பிரியலை... அறிவு ஜீவிங்க எழுதினா இப்படிதான் இருக்குமோ !
எஸ்கே,
இந்த கலீஜை மயிலை மன்னாரிடம் சொல்லி மொளி பெயர்க்க சொல்லாதீர்கள். மேட்டரு நல்லா இல்லை :(
//இந்த கலீஜை மயிலை மன்னாரிடம் சொல்லி மொளி பெயர்க்க சொல்லாதீர்கள். மேட்டரு நல்லா இல்லை :( //
ஜிகே இது உங்களுக்கே நியாயமா இருக்கா நீங்கபுடிக்கலைன்னு சொல்லுங அதுக்காக மன்னாருகிட்டயும் போடு வைக்காதீங்க :(
ஒரு மணி நேரம் சென்று என் பதிவைப் பார்க்கவும்!
அவசரமாக ம. மன்னாரிடம் போய்க் கொண்டிருக்கிறேன்!
ஆஹா, கமலைப் பற்றி ஒரு பதிவு போட்டாக வேண்டுமென்று ஆவலை தூண்டும் விதத்தில் வும் பதிவுகள் அமைந்து வருகின்றன.
வும்மை அடுத்த ஒரு தளத்திர்க்கு இட்டுச் செல்லும் பதிதனையும் போட்டு அங்கு நீர் வந்து அடித்து விளையாண்டு இருக்குறீர்... அருமை அய்யா அருமை... காட்டும் வுமது வாழ்வியல் புரிதல்களை வாய்ப்புகள் கிட்டும் போதல்லாம்...
மகி,
சத்தியமா ஒண்ணும் புரியலை!
மொத கவிதைக்கே ஒண்ணும் வழியக்காணும், இதுல ரெண்டாவதா?
வழக்கம்போல SK மயிலை மன்னாரை இட்டாந்துதான் புரிய வைக்கணும்.
இன்னும் ஒரு மணி நேரத்தில மன்னாரு வந்துடுவாராம்.
SK சரிதானே!
சுந்தர்,
இதுல 'காமிக்ஸ்' கதாபாத்திரத்துக்கு வழியே இல்ல!
சிலப்பதிகாரத்தை தான் குடையணும்.
புரியாதவங்க எஸ்கே அய்யா சொல்லும்போது புரியும் இல்லன்னா மண்டைய உடச்சுக்கோங்க :)
//சிலப்பதிகாரத்தை தான் குடையணும்//
இது ஒருவேளை தாய்மை பத்தின எதாவது ஒரு புத்தகத்துல தேடுங்க தம்பி கிடைக்கும்:)
தெகா உங்களுக்காவது புரிந்ததே அதுவரை மிக்க மகிழ்ச்சி
//வும்மை அடுத்த ஒரு தளத்திர்க்கு இட்டுச் செல்லும் பதிதனையும் போட்டு அங்கு நீர் வந்து அடித்து விளையாண்டு இருக்குறீர்... அருமை அய்யா அருமை... காட்டும் வுமது வாழ்வியல் புரிதல்களை வாய்ப்புகள் கிட்டும் போதல்லாம்... //
அது ஒன்னுமில்லைங்க நான் ஒரு குணா கமல் மாதிரி என்ன பன்றேன்னு எனக்கே தெரியாது அதனால தான் என்னை யாருக்கும் புரியமாட்டேங்குது
http://aaththigam.blogspot.com/2006/08/blog-post_20.html
"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"
//இந்த கலீஜை மயிலை மன்னாரிடம் சொல்லி மொளி பெயர்க்க சொல்லாதீர்கள்.//
??!!:(:))(:))
நைனா இது இதத்தான் நான் உங்கிட்ட எதிர்பாத்தேன் அதுக்குள்ள நம்ம ஜிகே அங்கன வந்து இதையெல்லாம் கொண்டுபோய் மன்னாரான்ட காட்டுனா உன்னைய கலீஜ் பன்னிடுவாருன்னி மொரட்டுனார் எனக்கும் உன்னும் பிரில இது என்னா அம்புட்டு மோசமன கவுஜயான்ன்னு அப்டீக்காண்ட ரோசிச்சீ பாத்தா நம்ம ஆளுங்க அதை கைமா பன்னி பிச்சி பிச்சி படிக்காசொல்ல அர்த்தம் அப்படிதான வரும்னு, நல்ல வேல பேட்ட பாசைல சொன்னாத்தான் நம்ம கவுஜய ரசிக்காங்க இதுவரைக்கும் கவுஜ எளுதி பத்து பின்னூட்டம் வாங்குனது இந்த மாதிரி கவுஜக்கி தான் உன் தயவுகு ரொம்ப நன்றிபா... அப்புரம் ஒரு சேதி நாலைக்கும் ஒரு ஆட்டம் இருக்கு அது அனேகமா எல்லாருக்கும் வெளங்கும்னுகீரன் இல்லன்னா கோச்சுக்காம கொஞ்சம் மன்னாரான்ட காட்டி தேத்துபா
http://aaththigam.blogspot.com/2006/08/blog-post_20.html
Post a Comment