ப்ரிய மோகன்

ப்ரிய மோகன்,
நான் உங்களுக்குக் கடிதம்

எழுதுவேன் என்று
எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.
உங்களைக் கடும் விமரிசனம் செய்து

கிண்டலடித்த கூட்டத்தைச்
சேர்ந்தவன் நான்.
இருப்பினும்
நேசக்கரம் நீட்டுவீரெனத்
தெரியும் எனக்கு.
இந்தக் கடிதம்கூட
எழுதியிருக்க மாட்டேன்.
சந்தித்து மன்னிப்புக் கேட்கலாமென்றால்,
உம்மைச் சுற்றியுள்ள
கமாண்டோ படை
தடையாக இருக்கிறது.
எங்காவது பொதுக் கூட்டத்தில்
உம்மைக் கண்ணில் பார்த்துக்
கையசைத்து,
என்னை மறு அறிமுகம்
செய்துகொள்ளலாம் என்றால்
அதற்கும் வழியில்லை.
நீர் என்னைப் பார்க்கிறீரா
இல்லையா
என்று தெரியாத அளவுக்கு
உம் தலையைச் சுற்றி
சூரிய வட்ட ஒளித்தட்டு
ஒன்றைப் பிடித்தபடி
அலைகிறார்கள் உங்கள் பக்தர்கள்.
உங்கள் காதி கமாண்டோக்கள்

இல்லாமல்,
சூரிய வட்டமில்லாமல்,
பழையபடி மகா மனிதனாக
உம்மைச் சந்திக்க வேண்டும்...
எப்படி? தெரியவில்லை.
என்னடா...

இந்தப் பயல் இப்படி ஒரு
விண்ணப்பம் வைக்கிறானே
என்று வியக்காதீர்கள்.

அன்று நான்
உங்களைச் சுட்டது
விவேகமில்லாத கோபத்தில்.
இன்று கோபம் தணிந்து

கை குலுக்க வருகிறேன்.
மறுதலிக்க வேண்டாம்!

உங்கள் நண்பன்
கமல்ஹாசன்.

17 comments:

said...

நல்லதொரு கவிதை. மாற்று சிந்தனை இப்படித்தான் இருக்குமோ.

நன்றி மகேந்திரன்.

said...

நன்றி வள்ளி கமல்ஹாசனுக்கு காந்தி மேல் உள்ள காதல் வெளிப்பாடு இது இது ஒரு கடிதம். கவிதையாக்கியது நான் !

said...

ஹே ராம்!

(இது சிறு முன்னோட்ட பின்னூட்டம், தலைவரின் கவிதைக்காக நான் மீண்டும் வருவேன்.)


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

Kalakkiteeenga Ponga...

I like this...

new anani from bangalore

said...

வாங்க நண்பா ...
//ஹே ராம்!

(இது சிறு முன்னோட்ட பின்னூட்டம், தலைவரின் கவிதைக்காக நான் மீண்டும் வருவேன்.)

//
அரே ராம் அன்னிக்கும் இப்ப்டீத்தான் சொல்லீட்டு போனே ஆனா வர்லே இப்ப நிம்பல் கைல வேல காட்டுறான் சேட்டு அடுத்த கதை போட்றான் :))

said...

//new anani from bangalore //


அனானி நன்றி அங்க ஏதும் ப்ராஞ்ச் இருக்கா இருந்தா ஒரு பத்து பேர் வேனுமே?

said...

//இப்ப நிம்பல் கைல வேல காட்டுறான் சேட்டு அடுத்த கதை போட்றான் :))
//
சேட்ஜி! அப்படியெல்லாம் போய்டாதீங்க! நாம் சமாதானமாவே இருப்போம்.
இல்லைனா "ப்ரிய சரவணானு" கவிதைலாம் எழுத வேண்டி இருக்கும்!

எங்கே மற்றவரைக் காணோம்? வழக்கம் போல் இப்"போதை"க்கு வருவாரா?

அன்புடன்...
சரவணன்.

said...

//அரே ராம் அன்னிக்கும் இப்ப்டீத்தான் சொல்லீட்டு போனே ஆனா வர்லே இப்ப நிம்பல் கைல வேல காட்டுறான் சேட்டு அடுத்த கதை போட்றான் :)) //

இது, இது தான்யா எனக்கு வேணும், சிரிப்பு ;-)) ரசித்தேன், நகைத்தேன்...

said...

/இது, இது தான்யா எனக்கு வேணும், சிரிப்பு ;-)) ரசித்தேன், நகைத்தேன்... //

தெகா இப்பத்தான் ஒரு ஸ்மைல் பிரச்சனை முடிஞ்சி கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிச்சா திரும்பவும் சிரிக்க சொன்னா அய்யோ நம்மால ஆகாதுப்பா;0)

said...

எங்கே மற்றவரைக் காணோம்? வழக்கம் போல் இப்"போதை"க்கு வருவாரா?///

சரா இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது,,, எப்போதைக்கு வந்தாலும் சரி வருவார் கண்டிப்பா ஆமா நீங்க எங்க போனீங்க?

said...

காலை வணக்கம் சொல்லுங்க மகி!

இப்படி பிரியிர மாதிரி கவிஜ போட்டீங்கன்ன உங்க மேலயும் தலைவர் கமலஹாசன் மேலயும் இருக்குற "பயம்" போயிடும், மயிலையாரே உங்களிடம் வந்து யோவ்!ரயிலு நிப்பாடுயா உன் கவிஜயனு சொல்லனும்! :))))))
எப்படீங்க மகி கவிதையும் போடுறீங்க, திடீர்னு பாத்தா கலகக்காரனாகவும் மாறுறீங்க, தற்பொழுது ஐயா பெரியாரை துணைக்குஅழைத்துள்ளீர்கள் போல.
புரிவது போல் கவிதை எழுதிய கமலஹாசனுக்கும், அதை பதிவிட்ட மகிக்கும் நன்றி!


அன்புடன்...
சரவணன்.

said...

அதான் எனக்கும் புரியலை நான் உண்மைலயே கலகக் காரனா சொல்லுங்க சரா சொல்லுங்க :)

சரா வணக்கம் வணக்கம், பிரியிர மாதிரி போடலாம் ஆனா ஒன்னு தெரியுமா இது கவிதை இல்லை ஒரு கடிதம் ,,,,, நான் செய்த கலகத்தில் இது கவிதையானது ஒன்னு கீழ ஒன்னா வரிசையா வார்த்தய அடுக்குனா அதுதான் கவிதை :))

said...

//நான் உண்மைலயே கலகக் காரனா சொல்லுங்க சரா சொல்லுங்க :)//

அடப்பாவி மனசாட்சியே இல்லாம எப்படியெல்லம் கேள்வி கேட்குற?:((
பல நேரங்களில் கலகக்காரன் மிகமிகக் குறைந்த சில நேரங்களில் மட்டுமே நீ கவிதைக்காரன்!:)))

நீ முழுநேர கலகக்காரனாக மட்டுமே இல்லாமல் அப்போ அப்போ கலாய்க்கும் கலகக்காரனாக இருப்பது எனக்குப் பிடிக்கும்.

எனக்கு உன் கலகத்தை தூர இருந்து பார்க்க மட்டுமே பிடிக்கும் (படித்துவிட்டு பின்னூட்டாமல் செல்வது)ஏனென்றால் அதில் விவாதிக்கப்படும் விசயங்களில் எனக்கு சுத்தமாகவே ஐடியா கிடையாது,வழக்கம் போல் கலகம் பண்ணு நானும் ஒரு ஓரத்தில் நின்று வழக்கம் போல் படித்துவிட்டு செல்வேன்.

//நான் செய்த கலகத்தில் இது கவிதையானது ஒன்னு கீழ ஒன்னா வரிசையா வார்த்தய அடுக்குனா அதுதான் கவிதை :)) //
உன் கடிதக்கவிதை அருமை!

அன்புடன்...
சரவணன்.

said...

நல்லா இருக்குங்க!!

said...

//வணக்கம் மகேந்திரன்.. நான் இந்த Bloggers உலகுக்கு வந்ததற்கு நீங்களும் ஒரு மறைமுக காரணம்..//

வாங்க சந்திர எஸ் சேகரன்... வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இன்னும் ஒன்னு ஒன்னா அவரோடது வரும் இங்கே

said...

//நல்லா இருக்குங்க!!

//

லொடுக்குப் பாண்டிக்கு மிக்க நன்றிகள்

said...

//ஒன்னு கீழ ஒன்னா வரிசையா வார்த்தய அடுக்குனா அதுதான் கவிதை :))
//
;-)