லாதாவின் கவிதைகள்

எதிர்பாராதபொழுது

பட்டாம் பூச்சியாய்ப் பறக்கும்
உன் துடிப்பில்எத்தனை யுகங்கள்
உயிர்த்திருந்தேன்
சிலிர்க்கும் புயலாய்உன் வேகம்

என் கணங்களைஅர்த்தப்படுத்தின
அன்று இரவு கண்ணாமூச்சி

விளையாடிக் கொண்டிருந்தபோதா
உன் கால்கள் வளர்ந்தன?
நீ பொறுக்கி வந்த உடைந்த பொருட்களும்

தெருச் சண்டைகளும்
இன்னமும்ஒட்டப்படாமல் கிடக்கின்றன
உனக்கும் நிலவுக்கும் உருட்டி வைத்துள்ள

சோற்று உருண்டைகளை
என்ன செய்யட்டும்?

அணுசக்தி

கடைந்த பாலில்மிதக்கும் வெண்ணெய்
சுழற்றச் சுழற்றத்திரண்டெழும்
தொட்டும்தொடாமலும்ஒரு சிறு நரம்போடும்

நுண்ணிய வாசம் கிளர்ந்தெழஉயிர் ஊறும்
ஒன்றாய் பத்தாய் ஆயிரம் ஆயிரமாய்

அணுக்கள் பெருகப் பெருக
எங்கும் பால் மணக்கும்
வலி ருசிக்கும் அற்புதத்தை

அறிவாயோ என் பூவே?
தெருவெங்கும் ஓடிதிசையெங்கும் கூவி

இறக்கை விரிக்கும் உலகம்
எல்லாம்எல்லோரும்வண்ணத்துப் பூச்சிகள்
எத்தனை கோடி இன்பம்!
அணுவைத் துளைக்கத்தாங்குமா

என் சிறு பூ?
ஒரு நொடியில்மூச்சடைத்து

வீழ்ந்து மரிக்கும்கரப்பான் பூச்சி

திணைப்புலன்

தீக்கிளறும் உராய்வுகளைக்கவனத்தோடு

தவிர்த்தபடிதெருச் சுவரில் அமர்ந்தோம்
வழமைபோல் அன்றும்வழிபாடு

எங்கள் முகங்களைக் கீறியிருந்தது
பாவத்தின் பிறப்பாகிய நீக்களே

பூமியின் பாரம் தாங்க வேண்டும்
வேதங்கள் வேறு என்றாலும்சாரம் ஒன்றுதான்.
தெருவை மறைத்த புகை மூட்டத்தில்

மறுபுறம் இருந்தவள் உரத்துப் பாடினாள்
தளதளத்திருந்தது வயல்சப்பாத்துக் காலுடன்

அவர்கள்வயல் அழிந்தது நிலமும் அழிந்தது
முகம் சிவந்து தெரு பதுங்கநாங்கள் கிளம்பினோம்
பனிக்காலத் தோற்றமெனநகரை நிறைத்த

நுரைப் பஞ்சுகளும்சாலை மரங்களின்
வண்ண மின் பூக்களும்காற்றைச் சூடேற்றின
நகரம் உறங்கிய பின்உலாக் கிளம்புவது

தேவதைகளா? சைத்தான்களா?
என்றபடி எதிரில் இவன்
அன்றைக்குத் தீ மூட்டசிக்கிமுக்கிக்

கல் தேடும் இவனிடம்இனியும் தோற்பதற்கில்லை
இரவுக்குள் ஒளிந்திருந்த
அவள் கண்களைத் தேடி எடுத்தேன்
'எந்தப் போருமே
முடிவற்ற போர்களையே தொடங்கி வைக்கிறது'

அவள் பனி மூட்டினாள்காலம் கலைக்காத தடங்களை
அதில் எரித்தாள்யுகங்களாய்நடந்த களைப்பில்
நொந்த பாதங்களைத் தன்கூந்தலால் நீவினாள்
ஊரடங்கு உடைத்துப் புறப்பட்டோம்

நிழலில் கட்டுண்டிருந்த வீடுகளை
அவிழ்த்துவிட்டபடியே நடந்தோம்
இரவுகள் பல கடந்துவந்தது அவள் வீடு.
சுவர்கள் அற்ற அதனுள்ளேஅறைகளும் இல்லை
காற்று இழைக்கும் அரங்கில்ஆடலாம் வா
காற்சிலம்பு களைந்து நாங்கள்வான்வெளி

இறங்கவிடிந்தது பொழுது.

லதா சிங்கப்பூரில் வாழும் தமிழ்க் கவிஞர். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு
'பாம்புக் காட்டில் ஒரு தாழை' யிலிருந்து

1 comments:

said...

hi ..the two poem are really superb..pls post more poems from this book..and if u have time pls read my blog ..and suggess ur ideas and post ur comments