அனுப்பாத கடிதங்கள்


அனுப்பாத கடிதங்கள்
இதுவரை
சொல்லிக்கொண்டதில்லை
இருவரும்..
ஆனால்
அது நம் இரண்டுபேரைத் தவிர ;
எல்லோருக்கும்
தெரிந்திருந்தது
உன்னை தவிர வேறெதையும்
கண்டிராத என்
கண்களுக்குஉன்
கண்களில் இருந்த
காதல்மட்டும் தெரியாமல்
போனதெப்படி?
விழித்தெழுந்தால் வேண்டுமென்று
திருடிவந்த
உன் பேருந்து அட்டை
புகைப்படம்
கருப்பு வெள்ளையாய்
இன்னும் இருக்கிறது.
என்னிடம்...
ஒரு மங்கிய மாலை
பொழுதில்ஆற்று மணலில்
நீ தந்த அச்சிட்ட
பிறந்த நாள் வாழ்த்தும்..
அதன் பின்னொருநாள் நீ
படிக்கத்தந்த தபூ
சங்கரின் முத்தத்தை கேட்டால்
என்ன தருவாய்
புத்தகமும்
அத்துடன் இணைப்பாய் தந்த,
நான் புகைபிடிப்பதை
உனக்கு காட்டிக்கொடுத்த
முத்தமும்...
இன்னும் இருக்கிறது
என்னிடம்.
ஐந்தாண்டுகாலம்
அழிந்தது தெரியாமல்
அணைத்தபடியே
இருந்த சிலஇரவு
நேரங்களின்
திருவிழாநாட்களும்..
என்னிடம் சொல்ல மறந்த
உன்னைபோல்உன்னிடம்
சொல்ல மறந்த என்னையும்
இருவரும் வேதனித்துபார்த்த போது
காலம் வெகுதூரம்
சென்றிறுந்தது
இன்று உன்
நினைவுகளைத்தவிர
வேறெதுவும் இல்லை.


இந்த கவிதை அந்திமழை இணையத்தில் வந்திருந்தது என் கவிதைகளை ஒரே இடத்தில் திரட்டும் பொருட்டு மீண்டும் பதியப்பட்டது.