அகலிகையின் யோனி


ரம்பை ஊர்வசி

இந்திராணி

அந்தப்புரத்தை அலங்கரிக்கும்

ஆயிரம் தேவதைகள்

இருந்தும் கூட

எப்போதும் அகலிகைளின்

அல்குல் தேடி

அலைகிறது

தேவலோகத்து

இந்திரனின் வஜ்ராயுதம்


கிழிந்த யோனிகளுள்

பிணமாக மல்லாந்து கிடக்கும்

மண்ணின் வேர்களைப் பிழிந்து

தாகம் தீர்த்துக் கொள்கின்றன

இந்திரனின் வெள்ளை யானைகள்

கல்லாக இருக்கும் போது

காதலாகி கசிந்துருகிய

அகலிகையின் முலைப்பாலிருந்து

விஷம் கலந்து வடிகிறது

சாபவிமோசனம் கொடுத்தவனைச்

சாகடிக்கும் நாட்களுக்காய்

காத்திருக்கிறது

மனித வெடிகுண்டுகளைப்

பிரசவிக்கும்

அகலிகையின் யோனி.


-புதிய மாதவி

6 comments:

said...

அய்யோ தமிழால கொல்லுறாங்களே?

Anonymous said...

புதிய மாதவி எழுதினதா இது ? நம்ப முடியவில்லையே ?

ஐ-யோ நீ - யுமா ?

said...
This comment has been removed by the author.
said...

மகி,

வர வர உன் பதிவெல்லாம் 'குறி'ப்பிட்டு சொல்லும் கவிதைகளாகவே வருது. பெண்ணியம் பேசுறிங்களாக்கும் ?

)

ஆணியம், பெண்ணியம் பேசும் பேனாக்களின்

கூர்முனைகள் கிழிக்க கிழிக்க

உதிர பெருக்கால் மேலும் மேலும்
ரணமாகிறது யோனி !


போங்கய்யா !!!!!!!!!!!!!!!!!

said...

சாமீ என்னதெல்லாம்...

said...

வெளியே மிதக்கும் ஐயா சுகுணாவதியாரின் பதிவுகளை "அதிக" கவனத்துடன் படித்ததின் விளைவா மகி?

//'குறி'ப்பிட்டு சொல்லும் கவிதைகளாகவே வருது//

குறிப்பிடத் தகுந்த பின்னூட்டம்:))


//உதிர பெருக்கால் மேலும் மேலும்
ரணமாகிறது யோனி !
//

கோவி , என்ன உமக்கும் தொற்றிக் கொண்டதா?