இரவுகளைப் புணர்ந்து திரியும் கள்ளத்தனமான விலங்கு


இரவுகளைப் புணர்ந்து திரியும்
கள்ளத்தனமான விலங்கினைப் போல
மிகவும் மோசமானவளாக அறியப்படுகிறேன்.
இரண்டாகக் கிழிதலுற்ற என் முகம்
சலனமடங்கிய யுத்த களத்தின்
கந்தலாடையாய் நசிந்திருக்கிறது.
பருவ நாணில் பூட்டப்பட்ட என் குரல்
ரணங்களை மென்று விழுங்கிய
துயரத்தின் ஒலியொடு பயணிக்கிறது.
காம்பிலிருந்து விடுபட்டு
வெடித்துச் சிதறும் துரியன் பழங்களென
நாற்றமெடுக்கின்றன வார்த்தைகள்.
எரிமலையின் நெருப்புக் குழம்பு
இறுகிக் கிடக்கும் கோர வடுவாய்க்
குவிந்திருக்கிறது என் தேகம்
வழக்கொழிந்த வரைபடத்தில்
உறைந்த இரத்தத்தின் மீது
படிந்திருக்கிறது என் இருப்பிடம்
வெயில் வீசும் செங்குத்தான மலைச் சரிவில்
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை
என்றாலுங்கூட
என் யோனி மயிர்கள்
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

-சுகிர்தராணி

4 comments:

said...

என்னையும் சேத்து ரெண்டுபேர் ஆன் லைன் அப்படீன்னு காட்டுது அந்த இன்னொரு ஆள் யாருப்பா?

said...

Nann than athu...

Anonymous said...

//என் யோனி மயிர்கள்
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன//

அந்த யோனி என்ன திராவிட க்ரீமி லேயர் ஓ பி சி யோனியா?அடேங்கப்பா.

said...

என்னை மிகவும் பாதித்த கவிகைகளுள் இதுவும் ஒன்று. ஆனால் சில வரிகள் ரொம்ப போல்டாக இருந்ததினால் எனதி பதிவில் பதிப்பிக்க யோசித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் பதிப்பித்துவிட்டீர்கள்.