நாய்களும் நானும்!!!(repeated Hits :)


வலப்பக்கத்து வீட்டு கருப்பு நாயும்,
இடப்பக்கத்து வீட்டு சாதி நாயும்
முக்கை நக்கிக் கொள்ளும் அளவுக்கு
நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தன !

எனக்கு நாய்கள் என்றால் பிடிக்கும் ,
என் வீட்டில் எந்த நாயும் இல்லை.
ஆனால் என் வீட்டுக்கு
நாய்கள் வந்து போவதுண்டு.


இருவீட்டு நாய்களும் எலும்பு அதிகம்
கிடைக்கும் போது முறைத்துக் கொண்டாலும்
அடுத்த தெரு நாய் கவ்விக் கொண்டு
சென்றுவிடக் கூடாதே என்ற 'பாசத்தால்'
ஒரு காலத்தில் சேர்ந்து எலும்புதுண்டை
பங்கு போட்டுக் கொண்டன !

ஒரு நாள், சாதி நாய், கருப்பு நாய்க்கு தான்
சாதி நாய் என்ற பெருமையை கூற
இதைப்பிடிக்காத கருப்பு நாய்,
சாதியைச் சொல்லி திட்டி குறைக்க,
சாதி வெறி கொண்ட நாய் நன்கு தெரிந்த
நாய்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டது.
என்னால் முடிந்த அளவுக்கு சண்டையை
விலக்கி நாய்களை
சமாதானமாகப் போகச் சொன்னேன் !

எந்த நாயும் கேட்பதாக தெரியவில்லை
சாதி நாய் தனது நண்பர்கள் நாயிடம் சொல்ல
அந்த நாய்கள் என்ன ஏது என்றே கேட்காமல்
குறைக்க ஆரம்பித்துவிட்டன.

அதுமட்டுமின்றி இந்த கருப்பு நாய் தான் சொறிநாய்
இது பலரையும் கடித்துவிட்டது,
கல்லால் அடிக்க வேண்டும் என்று ஊரே கேட்கும் படி
அனைத்து நாய்களும் குறைத்து வைத்தன.

நாய்கள் அடித்துக் கொள்ளட்டுமே, ஆனால்
எனக்கு பழக்கமாக கருப்பு நாய் இருப்பதற்காக
அதை வெட்டிவிடு என்கிறது சாதிநாயும்
அதற்கு ஆதரவான மற்ற நாய்களும் !

இந்த நாய் சண்டையின் குறைப்பின்
சத்தத்தில் உயர் சாதி நாய்களும்
உற்சாகமாக குலைக்கின்றன.
என்ன எழவவாவது ஆகட்டும்,

நாய் சண்டை நமக்கெதுக்கு என்று
ஒதுங்கிப் போக நினைக்கிறேன் !
நாய்களே உங்கள் சண்டையில்
என்னை வம்புக்கு இழுக்ககதீர்கள்
நாய்களே!

7 comments:

said...

உங்களுக்கும் அதே அனுபவமா ?

நாம பாவம் !

:((

said...

//என்னை வம்புக்கு இழுக்ககதீர்கள்
நாய்களே!//
நீங்க சொல்ல வர்றது புரியுதுங்க மஹி. ஆனா நாய்களேங்கிற வார்த்தையில எனக்கு உடன்பாடு இல்லே. பிரச்சினையில உங்களை இழுக்க வேணாம்னு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. அதே சமயம் கையாளப்பட்ட வார்த்தைகள் சரியாக இல்லே.

நீங்க எந்த காரியத்துக்காக மத்தியஸ்தம் பண்ணுனீங்கன்னு எங்களுக்கு தெரியும். அது எப்படி முடிஞ்சதுன்னும் தெரியும். உணர்ச்சி வசப்பட வேணாம்.

Anonymous said...

//நீங்க சொல்ல வர்றது புரியுதுங்க மஹி. ஆனா நாய்களேங்கிற வார்த்தையில எனக்கு உடன்பாடு இல்லே//

இளா,

இதைவிட கேவலாமாக அம்மாக்களை அசிங்கமாக பேசி இருக்கிறது நாய்கள்,
மகேந்திரன் சொல்வது சரிதான்

Anonymous said...

Very good post....You know both the dogs....

Here are all people finding which dog is sori nai....

Also some knows 'So called' Jathi Nai's

But no knows Sori Nai other than you....

Then why do you put all the headings related to Osai chella's Heading....

DO YOU THINK ITS ALL CO-INCIDENTincident....

சந்தேகம் கேட்பவன் said...

சாதி வெறி நாய் நோண்டு நாயா ?

ஜோதிராமலிங்கம் said...

உள் அர்த்தங்களை விட்டுவிட்டு
வெளியில் நின்று
முறைத்துப் பார்த்தபின்
இப்போதெல்லாம் ஏன் நாய்கள் குரைக்கின்றன என்றும் என்ன சொல்லிக் குரைக்கின்றன என்றும் நன்றாகப் புரிகிறது

Anonymous said...

ஹா ஹா ஹி ஹி ஹூஹூ


நான் தமிழன் (அல்ல)