இது கதையல்ல

நான் அப்போ மெட்ராஸிலே மெக்கானிகல் எஞ்ஜினியரிங் டிப்ளமோ சேந்த புதுசு, வடபழனி கவுரிசித்ரா கார்டன் இருக்கில்லே? அதாங்க அந்த வடபழனி பஸ்டான்ட் ஓரமா? ஆற்காட் ரோட்டிலே ஏவிஎம்முக்கு எதுத்த மாதிரி அதுலே ரெண்டாவது மாடில நான் எங்க மாமா குடும்பத்தோட தங்கியிருந்தேன். அப்ப நான் மெட்ராஸுக்கு புதுசுன்னாலும் சும்மா இருக்க நேரம் சென்னைய சுத்தி பாப்பமுன்னு கிளம்பிடுவேன். நான்(ங்க)தங்கியிருந்த ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டில அவங்க தங்கியிருந்தாங்க. யாருன்னா அவங்களும் அவங்க தோழியும்.

ரெண்டு பேருமே டாக்டர் ஆவறதே எங்களோட லட்சியம்னு படிச்சி என்ட்ரன்ஸ் மார்க் எடுத்து எப்படியோ காசையும் கொஞ்சம் குடுத்து மெடிக்கல் காலேசில சீட்ட வாங்கி போட்டாங்க ஆனாலும் அவங்க கொஞ்சம் துனிச்சலான பொண்ணுங்கதான். தனியா வீடு எடுத்து அங்கன போக வர காலேசிக்கு ஒரு கைனடிக் ஓன்டாவும் அவங்க அம்மா வாங்கி தந்துட்டாங்க (பாவம் அவங்க அப்பா சின்ன புள்ளையா இருக்கும் போதே போய்சேந்துட்டாராம்)

நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த இங்கிலிபீசு பாட்டுலாம் கொஞ்சம் கொஞ்சம் கேப்பனுங்க. அதை ஒரு நா ஆரும் ஊட்டுல இல்லாதப்ப நல்ல சத்தமா வச்சி, நம்ம பின்னால தெரு பசங்கதான் கீழவா கீழவான்னு பாடிக்கிட்டிருந்தாங்க. திடீர்னு கதவ தட்டுற சத்தம் கேட்டதுங்க என்னடா இது சத்தமுன்னு கதவ தொறந்தா அவங்க நின்னுகிட்டு இருக்காங்க . நம்ம வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் நடுவில ஒரு சின்ன இடைவெளிதான் லிப்டுக்கு அதனால அவங்களுக்கு சங்கடம் போல நம்ம இனிமே சத்தமா பாட்டு போடக்கூடாதுன்னு என்ன? ங்கன்ற மாதிரிபாத்தனுங்க. அவங்க எக்ஸ்யூஸ்மி அந்த பாட்ட கொஞ்சம் சத்தமா வக்க முடியுமான்னு கேட்டாங்க.... நீங்களே சொல்லுங்க புலின்னு நெனைசு எட்ட போனா ஒரு பூவால்ல இருக்கு .

சரிங்கன்னு சொல்லிட்டு நான் போயி அந்த பொட்டீல எம்புட்டு வக்க முடியுமோ அம்புட்டு சத்தம் வச்சனுங்க.. அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் கதவை சாத்திகிட்டு ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க போனா திருப்பி டம்மு டம்முன்னு சத்தம் அவங்கதான் மறுபடியும் வந்து என்னங்க உங்க அக்காதான் ஊருக்கு போயிட்டாங்களே எங்க சாப்பிடுவீங்கன்னு கேட்டாங்க, நான் கடையில சேலம் ஆர் ஆர் என்வி ல சாப்பிடுவேன் இல்லன்னா அங்கன பக்கத்தில ஒரு சரவணபவன் இருக்கில அதுல சாப்பிடுவேன்ன்னு சொன்னனா அதெல்லாம் வேண்டாம்ங்க உங்க அக்கா வற்ற வரைக்கும் நீங்க இங்கயே சாப்பிடலாம் ஒன்னும் கூச்சப் பட வேண்டாம்னு சொன்னாங்க.
நானும் ஒரு தயக்கத்தோட சரிங்கன்னு சொல்லிட்டு வரங்க நீங்க போங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன். ஒரு நல்ல பாட்ட எடுத்து சத்தமா வச்சிட்டு போயி சாப்பிடப் போனா அங்க அவங்க பிரண்டும் இருந்தாங்க.
அவங்க சொன்னாங்க கயல் ஏம்பா அதுக்குள்ள கூட்டியாந்த
இன்னமும் ரெடிபன்னலியேன்னு சொன்னாங்க. ஆகா இன்னைக்கு நாம தான் சமைக்கனுமா இல்லை வெறுந் தண்ணிதானானு நெனைச்சி ஒரு ஓரமா கெடந்த சேரத் தூக்கி போட்டு ஒக்காரப் போனனுங்க. அதுக்கு கயல் அவர வேனும்னா போயிட்டு அப்புறமா அழைச்சிட்டு வாயேன் நான் அதுக்குள்ள சமையல
ரெடிபன்னி வக்கிறேன்னு சொல்லுச்சிங்க. நானும் இதுக்கு மேல இருந்தா அந்த புள்ள நம்மல ஜன்னல் வழியா தூக்கி பஸ்டாண்டு பணிமனைல போட்டுடும் போல கெளம்பி நாம கடைல சாப்பிட்டுக்கலாம்ம்னு போனேன். அங்க போனா சேலம், சரவணா எல்லாம் கூட்டம், சரின்னு ஒரு 100 ரூபா காசிருந்துது ஒரு பீர் சாப்பிட்டு அப்புறமா சாப்பிடலாமுன்னு ஏவிஎம் உருண்டைக்கு
நேரா ஒரு ஒயின்சாப்பும் ஒரு பரோட்டாகடையும் இருக்கு அதுல போயி உக்காந்து ஒரு பீர் ஆர்டர் பன்னுனனுங்க.
நான் உள்ள ஒக்காந்திருந்தனுங்க இதுங்க ரெண்டும் வேகமா வண்டீல ஆற்காடு ரோட்டிலே போரூர் நோக்கி போகுதுங்க .... எங்கடா இந்த நேரத்துக்குன்னு நான் வெளிய வந்து பாத்தனா அங்கன பானுமதிம்மா ஆஸ்பிட்டலுக்கு ஆப்போசிட்டுல ஒரு ஐயர் ஓட்டல் இருக்குமே? பேரு ஞாபகமில்லை அங்க போயி நிக்குதுங்க கயல் வெளியவே இருக்கு சசி மட்டும் உள்ள போயி ஒரு பார்சலோட வருது. எனக்கு அப்பத்தான் தெரிஞ்சது ஆகா இதுதான் சமைக்கறதா இதுக்கு நான் கடையிலயே சாப்பிட்டுக்குவேனேன்னு மனசுல நினைச்சுகிட்டு பீரக் குடிக்க உள்ள போயிட்டேன்.
ஒன்ன முடிச்சு ரெண்டு பரொட்டாவ உள்ள தள்ளி நேரா வீட்டுக்கு போனேன் அங்க பாத்தா இது ரெண்டும் வாசல்ல நிக்குது எங்க போனீங்க சமைச்சு வச்சுட்டு தேடிப் பாத்தோம்னு கேட்டாங்க அடிப் பாவிகளா கடச்சாப்பாடு, வீட்டுச்சாப்பாடு விதியாசம் தெரிஞ்ச புருசன் வந்தா என்ன ஆகும்னு நெனச்சி இல்லைங்க எனக்கு பசி அதிகமா தாங்க முடியாது அதனால கடைல சாப்பிட்டு வந்தேன்னு சொல்லி ஒரு பீரேப்பத்த உட்டு
கதவதொறந்து உள்ள போனா அதுங்க வந்து கொஞ்சமா சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.
என்னடா இது புலிவால புடிச்ச கதையாச்சேன்னு சரி ஒரு கை சாப்டா அவஙக் மனசும் திருப்தி நமக்கும் நிம்மதின்னு போயி உக்காந்தா எல்லாத்தையும் அதுக்குள்ள கிச்சன்ல இருந்து கொண்டுவர மாதிரி கொண்டு வந்தாங்க. நானும் சிரிச்சுகிட்டே சாப்பிட்டு இந்த மாதிரி சாப்பாட்ட நான் இதுக்கு முன்ன (அந்த ஓட்டலோட பேரச் சொல்லி) அங்கதாங்க சாப்பிட்டிருக்கென்னு சொன்னேன்.... நல்ல வேளையா அவங்க மொகத்த பாக்கலை. கைய கழுவிகிட்டு நான் வீடுக்கு வந்தாச்சு. இது மாதிரியே நானும் கூப்பிடும் போதெல்லாம் சாப்பிட போவானா அதுவே நல்ல பழக்கமாச்சு.
அவங்க நம்ம வீடுக்கு வரபோக இருப்பாங்க. அக்காவும் பிரசவத்துக்கு ஊருக்கு போனவங்க வரலையா நானும் ஊருக்கு போக முடியலை. ஓசில சாப்பிட்டு காலேஜு செந்தில் கம்பெனி ன்னு ஜாலியா போச்சு ஒரு மூனு மாசம்.

ஒருநாளு காலையில வந்து கதவ தட்டி ஒனக்கு ஊரில எதும் பொண்ணு பாத்து வச்சிருக்காங்களான்னு சசி கேட்டுது. இதென்னடா எதோ நானா போயிட்டுருக்கவனை கூப்பிட்டு
தானா கேட்டா என்ன சொல்ல இல்லிங்கன்னு ஒரு பொய்ய சொன்னதுக்கு சரிங்கன்னு போச்சுது சசி.

நமக்கு யாருன்னுதான் ஊருக்கே தெரியுமே இவங்கள்ட பொய் சொன்னா தப்பில்லேன்னு சமாதனமாயி கண்டுக்காம விட்டாச்சு. நாங்க அதுக்குள்ள நல்லா பிரண்டாயிட்டோம். மொத மொதலா அப்ப நம்ம ஜான் டிரவோல்டா நடிச்ச ப்ரோகன் ஏரோ ராஜேஸ்வரில ஓடுச்சு அதப் பாக்க மூனு பேரும் போனமா. அங்க வச்சு கயல் சொல்லுச்சு எங்க வீட்டில மாப்பிள பாக்கறாங்கன்னு ஆகா நமகு இது ஏதோ ஆகாத விசயமாச்சேன்னு சரிங்க நீங்க என்ன சொன்னீங்கன்னு கேட்டதுக்கு நான் என்ன சொல்ல எல்லாம் அம்மாவோட முடிவுன்னு சொல்லிட்டு அதுக்கு நீங்க என்னய பொன்னு கேப்பீங்களான்னு கேட்டுது. இதையெல்லாம் பக்கத்துல ஒக்காந்து கேட்ட சசி ஒரே சிரிப்பா சிரிக்குது. எல்லா பயலும் அன்னைக்கு எங்களைத்தான் பாத்தான் .

சரி எதுவா இருந்தாலும் வீட்டுல போயி பேசிக்கலம்னு சொல்லிட்டு படத்த பாத்தா அது ஒன்னும் தெரியலை எம் பொண்டாட்டி ஞாபகம்தான் வருது. அடியே முதல்லயே கயலுகிட்ட எல்லாத்தையும் சொல்லிருந்தா இம்மாதூரம் ஆகாதேன்னு வருத்தத்தோட படம் முடிஞ்சு வெளிய வந்தா சசி இன்ன்மும் சிரிக்குது. என்னடா ஆச்சு இந்த புள்ளைக்குன்னு நானும் பல குழப்பத்தோட வீட்டுக்கு வந்தோம்.
சாப்பிடும் போது சொல்லுது என்ன சொல்றீங்கனு. நான என்ன சொல்ல எங்கதைய எடுத்து உட்டதுக்கு இதை யேன் முன்னமே சொல்லலைன்னு கேட்டுது சசி...... நான் அப்படி எதுவும் நினைக்கல அதானால சொல்லலைன்னு சொன்னதுக்கு சரி இதோட இது இருக்கட்டும் நீங்க எப்பவும் போல பெசுங்க இல்லன்னா கயல் மனசு கஷ்டப்படும்னு சொல்லுது. சரின்னு நானும் எப்பவும் போல இருந்தும் எம் மனசுல அப்ப அப்ப கல்லு விழுது. குட்டை கொழம்புது.

அவங்கள பத்தி எங்காளுகிட்டயும் நான் சொன்னதுக்கு அப்பிடி ஏதும் ஆசையிருந்தா அவங்கள்யே கட்டிக்கோங்க நான் கண்டுக்காம உங்கள மாதிரி ஒரு இளிச்ச வாயன் கிடைச்சா
கட்டிக்கிறேன்னு சொல்லுது. கயல் கல்லதூக்கி போட்டுதுன்னா எங்காளு அனுகுண்டே போடுது.

மத்தளம் என்ன மத்தளம் அதுக்கு பேரை எம்பேரா வைக்கலாம். ஆனாலும் எனக்கு மனசு கேக்காம எந்த முடிவும் எடுக்கலை. சரின்னு இருக்கும் போது ஒருநா அவங்க வண்டி ரிப்பேரு
நான் மாமாவோட வண்டிய எடுத்துகிட்டு வெளிய போறதுக்கு கிளம்பினேன் அவங்க வந்து இதப் பாத்து சரிபன்னிக் கொடுங்க மெக்கானிக்குனு நக்கலா சொன்னாங்க.
இந்த விஷயம் நடந்த பிறகு நான் சரியா அவங்க கூட முன்ன மாதிரி பேசரதில்லை சரின்னு பஜாஜ ஒதைக்கிர மாதிரி கைனடிக்க ஒதைக்க கிக்கர் காலோட கழண்டுகிச்சு. போச்சுடான்னு பாத்தா அவங்க ஒரு லுக்கு வுட்டாஙக் பாருங்க எஞ் சென்மத்துக்கும் மறக்காது.
உள்ள இருக்க குரங்கு ஒம்போது மரம் தாவுது நானும் ஒன்னும் பேசாம அதை எடுத்து முன்னால வச்சி வண்டி செட்டுக்கு போகனும் நீங்க ஒரு ரெண்டுநா பஸ்ஸுல போங்கன்னு சொன்னதுக்கு என்ன இன்னிக்கு கொண்டாந்து உடுன்னு சொனாங்க. நா எங்க பார்க் டவுன் வந்து அப்புறமா கோடம்பாக்கம் வாரது இன்னிக்கு கட்டுடா மாப்ப்ளன்னு நெனைச்சுகிட்டே (உள்ள வேறையா மரமெல்லாம் ஆடுது) வண்டிய எடுத்தா அது பின்னால ஏறிகிட்டு சரி போங்கன்னுது. அந்த ரோடு போட்ட காண்ட்ராட்டர எத்தனை நாள் திட்டிருப்பனோ இன்னிக்கு மட்டும் திட்டவே யில்லை.
அவங்க அன்னிக்கு போனதுக்கு பிறகு நான் வந்து தனியா ஒக்காந்து ஓசனை பன்னி பாத்தேன். சரி நம்மளுக்கு நம்மாளுதான் சரி இவங்கள சரிபன்ன நம்மாளையும் இவங்களையும் அறிமுகப் படுத்தி விட்டா மேட்டர் காலின்னு ஒரு நாலுநாள் லீவு போட்டு ஊருக்கு அழைச்சுகிட்டு போனேன், எங்க வீட்டில எங்க அக்கா அப்பா எல்லாருக்கும் இது முன்னமே எங்காளு சொல்லிடுத்து போல யாரும் எதுவும் கேக்கலை
எங்காளு வீட்டில கொண்டுபோயி அறிமுகப் படுத்தி வச்சேன்ங்க. ஒரு நாலு நாளும் பேசுனாங்க பேசுனாங்க அப்பிடி பேசுனாங்க என்னா பேசுனாங்கன்னு நான் கேக்கவேயில்லை. சரி ஊருக்கு போகலாமுன்னு கிளம்பியாச்சு . இது ரெண்டும் ஒன்ன ஒன்னு கட்டிகிட்டு அழுவுதுங்க. என்னான்னு கேட்டா பிரிய கஷ்டமா இருக்குதாம்.

நாலு நாளைக்குள்ள அப்ப்டி என்ன நட்போ. சரின்னு சென்னை வந்ததும் அவங்க இயல்பா ஆயிட்டாங்க .... நானும்தான் அதுக்கப்புறம் ஆச்சு 2 வருஷம் நான் ஊருக்கு வந்து அவங்க
ரெண்டுபேரை கொன்னு டாக்டராயி, எங்கல்யாணத்துக்கு கூப்பிடப் போனப்போ அவங்க கல்யாணம் முடிஞ்சு போயிருந்துது.
என்னடான்னு கேட்டா லவ்வாம் அவரும் டாக்டர்தான் ஆனா பெங்களூர் . இப்ப செங்கல்பட்டிலயே இருக்காங்க. கண்டதும் காதல் கல்யாணத்துக்கு கூப்பிட முடியலைன்னு வருத்தப் பட்டாரு அப்பதான் அவரு சொன்னாரு நீங்க தப்பிச்சிகிட்டீங்கன்னு சொன்னாரு

என்னான்னு கேட்டதுக்கு ஓட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கலையாம். அட எல்லா கதயும் சொல்லியாச்சான்னு கேட்டதுக்கு இந்த கதைய சொல்லித்தான் லவ்வே ஆச்சுன்னார். எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் ஒரு வாரத்துக்கு முன்னமே வந்தாங்க எல்லா வேலையும் எடுத்து செஞ்சாங்க, அதுக்கு பிறகு அவங்க வீடுக்கு தான் முதல் தேவைக்கே போனோம்.
என் மனைவியும் கயலும் நல்ல நெருக்கமான தோழிகளாயிட்டங்க. அதுக்கு பிறகு என் மகன் பிறந்தப்போ வந்து அவங்க ஒருமாசம் எஙக கூடவே இருந்தாங்க.எனக்கு இதையெல்லாம் நினைச்சா எதுக்கு அவங்களை பாத்தோம் அவங்க எதுக்கு என்னை கட்டிக்க விரும்பினாங்க அப்புறமா எப்படி சமாதானமானாங்க, எதுவுமே தெரியலை.
கேட்டதுக்கும் சொல்லலை.

அவங்களுக்கு இப்ப ஒரு பொண்ணு இருக்கு .. இந்த சொந்தம் எனக்கு இன்னும் புடிச்சிருக்கு கல்யாணம் பன்னீருந்தா கூட இப்படி நட்போட இருந்திருப்பாமான்னு தெரியலை. அவரும் ரொம்ப நல்லவர்.

எந்த தப்பான என்ணமும் இல்லாம பேசுவாரு இன்னமும் நான் போன் பன்னலைன்னா கூட அவரு போனடிச்சு எப்ப ஊருக்குன்னு கேப்பாரு.
இதையெல்லாம் அவங்க படிச்சா சந்தோஷப் படுவாங்க

(இச் சம்பவம் நிறைய உண்மைகளும் கொஞ்சமாய் வார்த்தைகளும் கலந்தது 1996- 1999 + இன்று வரை)












42 comments:

said...

யோவ் கீழ்மாத்தூர் படிச்சி மாளலையா அவ்ளோ நீளம், அதும் இந்த மாதிரி மேட்டரை போயி இவ்ளோ நேரம் எழுதனா வயிறு கருகி ஒரே புகை, வீட்டம்மா கேட்குறாங்க அங்க என்னங்க ஒரே கருகுற நாத்தாம் அடிக்குது, ஒரே புகைச்சலா இருக்குனு... ம்....

said...

//கருகுற நாத்தாம் அடிக்குது, ஒரே புகைச்சலா இருக்குனு//

புகை உடலுக்கு பகை மனசுக்கும்தாங்க சிங்கப்பூர்ல ஹெனிக்கெய்னா? ஆங்கரா? கிங்பிஷ்ஷரா? 5000? இல்லை கல்யாணியா ? எதுங்க அதிகமா கிடைக்கும்?

said...

சூப்பர்ப் அனுபவங்க... உண்மைதான் மகே' நீங்க அவங்கள திருமணம் பண்ணியிருந்த இவ்ளோ நட்போட இருக்க முடியாது... அடெ நம்புங்க...

நல்ல த்ரில்ல இருந்துச்சு...

said...

சூப்பர் மகி..

தற்செயலா என் கதைக்கு கயல்விழின்னு பேரு வச்சதுக்கு ஒரு சூப்பர் அனுபவத்தை சொல்லிட்டீங்க...

வளர்க உங்கள் நட்பு..

//அங்கன பானுமதிம்மா ஆஸ்பிட்டலுக்கு ஆப்போசிட்டுல ஒரு ஐயர் ஓட்டல்
இருக்குமே? பேரு ஞாபகமில்லை அங்க போயி நிக்குதுங்க கயல் வெளியவே இருக்கு சசி மட்டும்
உள்ள போயி ஒரு பார்சலோட வருது. //

இப்பல்லாம் இப்படித்தான் சமைக்கறாங்களா???


//இதையெல்லாம் அவங்க படிச்சா சந்தோஷப் படுவாங்க
//

ரொம்ப சந்தோஷம் மகி..

said...

நன்றி தெகா ,,

//மகே' நீங்க அவங்கள திருமணம் பண்ணியிருந்த இவ்ளோ நட்போட இருக்க முடியாது... //

அதுவே உண்மையும் கூட ஒருவேளை அப்படி ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் நிச்சயம் எதும் ஈகோ பிரச்சணையோ அல்லது நான் எதாவது தவறு செய்துவிட்டேனோ எனும் குற்ற உணர்வுக்கு ஆளாகி யிருப்பேன்

Anonymous said...

"அந்த ரோடு போட்ட காண்ட்ராட்டர எத்தனை நாள்
திட்டிருப்பனோ இன்னிக்கு மட்டும் திட்டவே யில்லை"

:)

said...

//தற்செயலா என் கதைக்கு கயல்விழின்னு பேரு வச்சதுக்கு ஒரு சூப்பர் அனுபவத்தை சொல்லிட்டீங்க...//

கப்பி நான் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்னை மீண்டும் அந்த 1996களுக்கு ஒரு பயணத்தை உண்டாக்கிய உனக்கு மிக்க நன்றி


//இப்பல்லாம் இப்படித்தான் சமைக்கறாங்களா//

பின்ன என்னா நல்லவேளையா சந்திரா சொன்ன மாதிரி நான் தப்பிச்சாச்சுப்பா:)

நல்லா இன்னொறு தடவை வேண்டுமானாலும் படித்து உன் வாக்கை காப்பற்றவும் :)

said...

//அந்த ரோடு போட்ட காண்ட்ராட்டர எத்தனை நாள்
திட்டிருப்பனோ இன்னிக்கு மட்டும் திட்டவே யில்லை"

:)//


அனானி நீங்கவேற அதயெல்லாம் கிளப்பி விடாதீங்கப்பா

:)

said...

//நல்லா இன்னொறு தடவை வேண்டுமானாலும் படித்து உன் வாக்கை காப்பற்றவும் :)//

வாக்கும் நாக்கும் ஒன்னுலே...மறக்க மாட்டேன் ;)

ஆனா மெதுவா தான் வரும்..அவசரப் படக் கூடாது ;))

said...

அது சரி..இது ஏன் கதம்பம்ல வராம கவிதைகள்ல வருது??

said...

//கதம்பம்ல வராம கவிதைகள்ல வருது//
இல்ல கப்பி இதுவே ஒரு க(வி)தை தானே அதனால தான் அதோட மட்டுமில்ல அங்க கதம்பத்தில கீழ்திருப்பதி பக்கமிருந்து வஜ்ரா ஒரு சத்தம் போட்ருக்காரு அது என்னான்னு
பாக்கிறேன் முதலில். பொறுமையா வா ஆனா பொறுப்பா வா

said...

அன்பு மகேந்திரன்,
நல்லா ரசிக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க!
பாராட்டுக்கள்!!

அன்புடன்,
சீமாச்சு

said...

கப்பிய யாரும் பாத்தீங்களா?

said...

மகி,
நீங்க இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருந்திருக்கீங்களே!!!

//கல்யாணம்
பன்னீருந்தா கூட இப்படி நட்போட இருந்திருப்பாமான்னு தெரியலை//
இது ரொம்ப உணர்ந்து சொல்லிருக்கிங்கனு நினைக்கிறேன்...

கப்பி,
இப்படி ஒரு அருமையான கதை(?)யை மகிட்ட இருந்து கொண்டு வந்ததுக்கு உனக்கு ஒரு ஸ்பேஷல் நன்றி

said...

//கப்பிய யாரும் பாத்தீங்களா? //

வந்தாச்சு!!! ;)

pardon...லேட் ஆயிடுச்சு

said...

//மகி,
நீங்க இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருந்திருக்கீங்களே//

உண்மையை சொன்னா தில்லாலங்கடியா சொல்லுங்க சொல்லுங்க நேத்து எழுதுடா எழுதுடான்னு சொல்லிட்டு இப்ப கிண்டல் அடிக்கறீங்க .:(



யாரோ புன்னியவான் இதப் போயி தேன்கூடு போட்டிக்கு பரிந்துரை பன்னிருக்கார் அது யாரா இருந்தாலும் நன்றி

said...

//கப்பி,
இப்படி ஒரு அருமையான கதை(?)யை மகிட்ட இருந்து கொண்டு வந்ததுக்கு உனக்கு ஒரு ஸ்பேஷல் நன்றி//

நன்றி எல்லாம் எதுக்கு வெட்டி..

உங்க கதையையும் சொல்லுங்கன்னு இப்போ நான் கேட்டா எனக்காக ஒரு பதிவு போட மாட்டீங்களா என்ன? ;)

said...

//யாரோ புன்னியவான் இதப் போயி தேன்கூடு போட்டிக்கு பரிந்துரை பன்னிருக்கார் அது யாரா இருந்தாலும் நன்றி //

அட ஆமா மகி..
அனுப்பிட்டீங்களா???

said...

//நான் கேட்டா எனக்காக ஒரு பதிவு போட மாட்டீங்களா என்ன//

வெட்டிப்பயல் கப்பி சொல்றதை நம்பி பதிவெல்லாம் போடாதீங்க நம்ம கதை இப்ப தேன்கூடு வரைக்கும் சிரிக்குது...

//அனுப்பிட்டீங்களா??? //
அட நான் இல்ல கப்பி யாருன்னு தெரியலை நாமளே மாத்தி மாத்தி ஓட்டு போட்டாத்தான் உண்டு :))

//pardon...லேட் ஆயிடுச்சு //

பாட்டு பாட போறியா? :))))

said...

கப்பி அப்டீக்கா ஓரமா தமிழ் மணத்தில இந்தியா59ன்னு ஒரு பதிவிருக்கு அது என்னான்னு கொஞ்சம் பாக்கலாமே?

said...

//உங்க கதையையும் சொல்லுங்கன்னு இப்போ நான் கேட்டா எனக்காக ஒரு பதிவு போட மாட்டீங்களா என்ன? ;)
//
கப்பி,
நமக்கு கதையெல்லாம் சொல்ல வராது :-(

ஐ அம் தி எஸ்கேப் :-))

said...

//நமக்கு கதையெல்லாம் சொல்ல வராது //

உங்கள யாருங்க கதை கேட்டது நடந்த உண்மையச் சொல்லுங்க அது போதும் :))

said...

//உண்மையை சொன்னா தில்லாலங்கடியா சொல்லுங்க சொல்லுங்க நேத்து எழுதுடா எழுதுடான்னு சொல்லிட்டு இப்ப கிண்டல் அடிக்கறீங்க .:(
//
கிண்டல் எல்லாம் அடிக்கல மகி...

//உங்கள யாருங்க கதை கேட்டது நடந்த உண்மையச் சொல்லுங்க அது போதும் :)) //
என்னங்க பண்றது... எவன் கடலைப் போட்டாலும் கட் பண்றதே நம்ம வேலையா இருந்துச்சி. அதுல எந்த நாயோ சாபம் விட்டுடுச்சி போல... நம்ம பிராஜக்ட்லயாவது யாராவது வருவாங்கனு பார்த்தா எல்லாருமே பசங்களா இருக்கானுங்க!!! என்னத்த சொல்ல :-((

said...

//பசங்களா இருக்கானுங்க!!! என்னத்த சொல்ல //

ஓகோ அதனால தான் வந்த அந்த பிகரையும் செந்தில் கூட தள்ளிவிட்டதா :))

said...

//ஓகோ அதனால தான் வந்த அந்த பிகரையும் செந்தில் கூட தள்ளிவிட்டதா :)) //

இதெல்லாம் வேற நியாபகம் வெச்சிருக்கீங்களா??? :-))

இந்த ஒரு காரணத்துக்காகவாது ஊருக்கு போயிடலாமானு தோணுது...

நானும் அங்க இருந்த வரைக்கும் என்னை சென்னைக்கு அனுப்புங்கடா (வெண்ணைங்களா)னு கெஞ்சி கூத்தாடி பார்த்தேன்...
ஒண்ணும் வேலைக்கு ஆகல...

கடைசியா சென்னையெல்லாம் அனுப்ப முடியாது வேணுமுனா பாஸ்டன் போன்னு சொல்லி அனுப்பிட்டனுங்க :-((

said...

//இதெல்லாம் வேற நியாபகம் வெச்சிருக்கீங்களா//

பின்ன இதெல்லாம் மறப்பமா கரீட்டா வேனுங்கும் போது சொல்லுவேன்.........

//வேணுமுனா பாஸ்டன் போன்னு சொல்லி அனுப்பிட்டனுங்க :-(( //

ஹிம் நான் என்னா சொல்ல இப்பிடி வெட்டிப் பயலா இருக்கும் உங்களை, நாடோடியாக்காமல் விடமாட்டார்களோ?

said...

//ஹிம் நான் என்னா சொல்ல இப்பிடி வெட்டிப் பயலா இருக்கும் உங்களை, நாடோடியாக்காமல் விடமாட்டார்களோ?
//
இன்னும் கொஞ்ச நாள் தான்...
அப்பறம் எப்படியாவது வந்துடமாட்டோம்...

டார்கெட் சென்னைதான்... பெங்களூர் வாழ்க்கை போர் :-(

said...

பெங்களூரு பெண்களூராச்சே ராச?

said...

//பெங்களூரு பெண்களூராச்சே ராச?
//

என்ன பண்ண நேட்டிவிட்டி கிடைக்கமாட்டிங்குது :-))

(டிராபிக் ஜாம்ல சீக்கியே வாழ்க்கை சீரழிஞ்சிடும்...)

said...

////
கப்பி,
நமக்கு கதையெல்லாம் சொல்ல வராது :-(

ஐ அம் தி எஸ்கேப் :-))
//

என்ன மகி..இப்படி சொல்லி எஸ்கேப் ஆகி இருக்காரு..நீங்களும் அப்படியே விட்டுட்டீங்களே :(

said...

உருட்ட உருட்ட போயிகிட்டே இருக்குது எலி (அதாங்க மவுஸு).
என்னடா இது நல்லாவும் இருக்கு,ஆனா நீளமாவும் இருக்கு, பாதில விட முடியல.

முழுசும் படிச்சு முடிச்சு பாத்தேன்.
நல்லாவே இருந்துச்சு.

said...

//ஹெனிக்கெய்னா? ஆங்கரா? கிங்பிஷ்ஷரா? 5000? இல்லை கல்யாணியா ? எதுங்க அதிகமா கிடைக்கும்? //

அங்க எல்லாம் காய்கறி வாங்கற மாதிரி இந்த ஐட்டங்கள சூப்பர் மார்க்கெட்டில வாங்கலாமாம்!!

said...

//என்ன மகி..இப்படி சொல்லி எஸ்கேப் ஆகி இருக்காரு..நீங்களும் அப்படியே விட்டுட்டீங்களே :(
//

இப்படியெல்லாம் ஏத்திவிடக் கூடாது...
மகியும் நைசா நூல் விட்டுட்டுதான் இருக்காரு...

said...

ரொம்ப நன்றி தம்பி,


கப்பி அவரு ஒன்னும் எங்கிட்ட சொல்லலை ஒங்கிட்டதான் சொன்னாரு எப்படிய்யாவது புடிச்சு எழுதுங்கப்பா !

said...

நல்ல கதை. :)

said...

// நல்ல கதை//
அய்யோ இது கதை இல்லைங்க :))

நன்றி மதி கந்தசாமி

said...

பாஸ்டன் பாலா அவர்கள் இப் பதிவின் விமர்சனத்தில் எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டி இருந்தார் அவை முற்றிலும் களையப் பட்டன. நன்றி பாலா

said...

ஹொலா கப்பி எங்கப்பா இருக்கே ஒனக்கொரு சேதியிருக்குது சீகிரம வா

said...

வந்தாச்சு..என்ன மேட்டர்??

said...

//வந்தாச்சு..என்ன மேட்டர்//

எவ்வளவு முக்கியமான சேதி வச்சிருக்கேன் என்னவா? போயி என்னோட கலகப் பதிவ பாருங்க :))

said...

கடைசில சென்ட்டிமெண்டை லிட்டர் லிட்டரா ஊத்திருக்கீங்க. ஆனா, உண்மைன்னு நினைக்கறப்போ, OKதான்.

said...

//கடைசில சென்ட்டிமெண்டை லிட்டர் லிட்டரா ஊத்திருக்கீங்க. ஆனா, உண்மைன்னு நினைக்கறப்போ, OKதான்.//

நன்றி உதயகுமார் இதை நான் தேன்கூடு போட்டிக்காக எழுதவில்லை கதையும் இல்லை அதனால் அப்படி தோன்றலாம், கப்பி தனது ஒரு கதையில் கயல்விழி எனும் பேரை பயன்படுத்த அதுபற்றி பின்னுட்டத்தில் நன் ஒன்று சொல்ல உடனே முழு சம்பவங்களையும் எழுதவேண்டும் என்று கப்பி, வெட்டி இருவரும் போட்டு அடிக்க அப்படி வந்ததுதான் இது கதையல்ல. நன்றி உதயகுமார்