ஆலியோடு தூங்கும் தனிமை


ஆலியோடு தூங்கும் தனிமை
சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்தண்ணீர்த்
திவலை மிதித்துபடியேறும் தனிமை
மெழுகுத் திரி வெளிச்சத்தினடியில்

கருமையாய்த் தேங்கி நிற்கிறது
பின் என்னோடு நடந்தபடி என்ன

பேசுவதெனத் தெரியாமல் தயங்குகிறது
தேனீர் தயாரிக்கையில்

' எனக்கு ' எனக் கேட்கக் கூடாதா
அது என்றும் தேனீர் அருந்துவதேயில்லை
பூக்கள் மிதக்கும் தாழியில்

தாமரை மகரந்தத் தலத்தில்
தலை சாய்க்கிறது
ஆலிக்குட்டியின் மூச்சருகே போய்

தூங்கிவிட்டதா எனத் தொட்டுப் பார்க்கிறது
தனிமை என் நாய்க்குட்டியை

அணைத்துக்கொண்டு தூங்கப் பிரியப்படுவதை
உணரும் வேளை
கசிந்துருகும் மெழுகுச் சொட்டுகள்

கண்ணுக்குள் விழுந்து உறைந்து
உதிர்கின்றன
அதன் பிறகும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்

தனிமை என் வீட்டுக்குள் இடம்மாறி இடம்மாறிப்
படுத்துறங்குவதை.

வெறுமை
உன் படுக்கையறைக்குள்
தொங்கும் வெற்றுத் தூக்கணாங்குருவிக் கூடோ
கடைசித் துளிக்குப்

பிந்திய மதுக் கோப்பையோ
என்றேனும் சொல்லியிருக்கிறதா

என் வெறுமையை.

-ரோஸ்லீன்

ரோஸ்லீன் கவிதைகளுக்கான நன்றிகள்: தோழி.காம்

5 comments:

said...

அன்புள்ள அனைவருக்கும் போஸ்ட் எ கமெண்ட்டின் கலரை மாற்றுவது எப்படி என்பதை யாரும் சொல்ல முடியுமா என் பதிவில் பாருங்கள் பார்த்தால் சரியாக தெரிவதில்லை அதன் கலரை மாற்ற யாரும் உதவுங்களேன் மற்றவற்றை தமிழில் மாற்றும் போது இதுமட்டும் மாறவில்லை காரணம் கூறினால் மகிழ்வேன்

said...

மகேந்திரன்,
நீங்கள் உங்களின் தள template ல் உள்ள codeல் மாற்ற வேண்டும்.

said...

எங்களையும் பற்றி கூறியிருக்கின்றீர்களே!

said...

//எங்களையும் பற்றி// ஐயா சாமி இது ஒங்கள பத்தி இல்லய்யா....... இது ஆலி

said...

thalaiva ..ungal comments page-l irundha aligal ooivadhillai page kku thriyaama poitane..ayyao saami..eppdi idhai tamil manam anumadhikkiradhu..idahi restrict pannna valiye illaya